TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » பொழுதுபோக்கு » தினம் ஒரு தகவல் » தத்துவஞானியிடம்...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

தத்துவஞானியிடம் வேடிக்கை

[தமிழக நேரம் : July 7th, 2009 at 22:16]

முல்லாவின் ஊருக்கு ஒரு தத்துவ ஞானி வந்தார். ஒவ்வொரு நாளும் மாலையில் பொதுமக்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றினார். ஒருநாள் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது கீழக்கண்டவாறு ஒரு தத்துவத்தைக் கூறினார்.

இறைவன் சிருஷ்டியில் எல்லா உயிர்களுமே சமம்தான். நாம் மற்ற மனிதர்களை மட்டுமின்றி மிருகங்கள் போன்ற உயிரினங்களையும் நமக்குச் சமமாக பாவித்து அன்புடன் நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தத்துவ ஞானியிடம் ஒரு வேடிக்கை செய்ய நினைத்தார். உடனே அவர் எழுந்து தத்துவ ஞானி அவர்களே, நீங்கள் கூறும் கருத்து அவ்வளவு சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது என்றார். இதை எந்தக் கண்ணோட்டத்தில் கூறுகிறீர், நீர் உமது வாழ்க்கையில் ஏதாவது சோதனை செய்து பார்த்தீரா? என்று தத்துவஞானி கேட்டார். சோதனை செய்து பார்த்த அனுபவம் காரணமாகத்தான் இந்தக் கருத்தை கூறுகிறேன் என்றார் முல்லா. என்ன சோதனை செய்தீர்? அதை விளக்கமாகக் கூறும் தத்துவ ஞானி கேட்டார். நான் என்னுடைய மனைவியையும் என் வீட்டுக் கழுதையும் சரி சமமாக நடத்தினேன் என்றார்.

அதன் விளைவு என்ன? என்று தத்துவ ஞானி கேட்டார். எனது பரிசோதனையின் விளைவாக ஒரு நல்ல கழுதையும், கெட்ட மனைவியும் கிடைத்தாள் என்று சொன்னார். இதைக் கேட்டதும் தத்துவ ஞானி உட்பட அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர்.

 

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,  
கொல்லி ம‌லை சார‌ல் பொ. ஆனந்த் பிர‌சாத்
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: தினம் ஒரு தகவல்
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 579
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 486
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 298
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 205
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 164
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
பாகிஸ்தான் லாகூரில் குண்டுவெடிப்பு 40 பேர் பலி 150ற்கும் அதிகமானவர்கள் காயம்
பாகிஸ்தான் லாகூரில் குண்டுவெடிப்பு 40 பேர் பலி 150ற்கும் அதிகமானவர்கள் காயம்
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்