|
|
 | |  |
|
தமிழர்களின் செறெப்ரெனிக்கா...
[தமிழக நேரம் : June 27th, 2009 at 15:30]
சிறீலங்கா இராணுவத்தினால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதால் ஐ.நா. குறைத்து மதிப்பிடுகின்றதா? குற்றம் சாட்டப்பட்ட அறிக்கைகள் எல்லாம் சிறீலங்கா அரசாங்கம் சிதறாமல் இருப்பதற்காகவே புறக்கணிக்கப்படப்பட்டனவையா?
அழிப்பின் பின்னர் மே மாதம் 27ம் திகதி நிகழ்ந்த மனித உரிமைகள் அமைப்பின் சிறப்பு அமர்வில் "Times"பத்திரிகையாலும்,"Le Monde" பத்திரிகையாலும் வைக்கப்பட்ட தொடர் குற்றச்சாட்டுகள் ஐ.நா.வின் தூக்கத்தைக் கெடுத்த கொடூரமான வாரமாகியது.
2800 பேர் பலியாகியதாக வெகு காலத்திற்கு முன்பே ஐ.நா செயலாளரின் செயலகத்திலிருந்து வந்த அறிக்கையானது மிகவும் குறைததே மதிப்பிடத்தக்க தொகை என்பது எங்களது சந்தேகமாகவே இருந்தது. மேலும் தற்போது தெரிவித்த 7000 பேர் பலியான தொகைகூட "Times" தெரிவித்த 20,000 பேர் பலியான தொகையிலிருந்து பாரிய அளவில் வேறுபடுகின்றது. ஒரு சிறிய விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இலட்சக்கணக்கான மக்கள் வாழும்போது அந்தப்பகுதி மீது தொடர்ந்து பாரிய எறிகணை வீச்சுத் தாக்குதலும், குண்டுத்தாக்குதலும் நிகழ்த்தப்படும்போது "Times" அறிவிக்கும் தொகையானது கவலைக்கிடமாக உண்மையாகவே உள்ளது.
இந்தச் செய்தி மறைப்பீடு ஐ.நா.வால் செய்யப்பட்டிருக்கப்படுமாயின் ஐ.நா, இந்தப் போர்க் குற்றத்தை மறைக்கும் நோக்கமானது விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். ஐ.நாவிற்குக் கொழும்பு தங்களது "மனிதாபிமான'ப் பாதைகளைத் திறந்துவிடக்கூடும் என்ற இன்றைய அரசியல் அபிலாசைகளுக்காகப் பலியிடப்பட்டதா? அல்லது இன்னும் கூடுதல் சாத்தியக்கூறுள்ளதாக, பான்கீமுன் அதிகூடிய "எச்சரிக்கையோடு' இதில் முழுமையாகப் பங்குபற்றுவதைவிட, அப்பாவித்தனமாக இருக்கவே முடிவு செய்திருப்பாரா?
ஐ.நா அதிகாரிகள் எவருமே துணை இராணுவக் குழுக்களின் செயல்களை சிறீலங்கா பயன்படுத்தப்படுவதுபற்றி விமர்சிக்கவேயில்லை. மனித உரிமைகள் கண்காணிப்பகமும் மற்றைய அமைப்புக்களும் சிறீலங்கா இராணுவம் மக்கள் குடியிருப்புக்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டு அவர்களைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து விரட்டியடிக்க முயற்சித்ததை வன்மையாகக் கண்டித்துள்ளனர். சர்வதேச பிணக்குகளுக்கான குழு (International Crisis Group) சிறீலங்காவின் சட்டவரம்புகளை மீறிய கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளும், சட்டத்திற்குப் புறம்பான கடத்தல்களும், படுகொலைகளும் 2006ம் ஆண்டின் பசிக்கெதிரான அரச சார்பற்ற நிறுவனத்தின் (ACF) 17 தமிழ் உறுப்பினர்களின் உயிர்களைப் பலிவாங்கியது.
போர்ப்பிராந்தியத்திற்கப்பாலும் இப்படியான வன்முறைகளும், கொலைகளும் நடக்கின்றன. சர்வதேச மன்னிப்புச் சபையின் 2008ம் ஆண்டின் அறிக்கையின்படி சிறீலங்காவின் அரசு விரும்பியபடி கைதுகளும், சித்திரவதைகளும் வெகுவாக நடப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. ""ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுள் சிறீலங்காவே பாரிய அளவில்சட்டங்களை மதிக்காது ஊடகங்களின் குரல்வளையை நசிக்கும் நாடாக உள்ளது''என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்புக் கூறியுள்ளது.
இப்படியான நிலையில் இருக்கும் சிறீலங்கா அரசு என்றைக்கோ நெருக்கமான சர்வதேசக் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருத்தல் வேண்டும். ராஜபக்வின் போர்த்திட்டம் சர்வதேசத்திற்கு 2004 -2005ம் ஆண்டுகளிலேயே தெரியவந்தும் உள்ளது.
ஆனால் இங்கு இதற்கு எதிரான நிலைப்பாடே தோன்றியுள்ளது. 2005ல் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் கூடிய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும், சிறீலங்காவிற்கான சர்வதேசத்தின் புவிசார் அரசியல் கொழும்பின் பக்கமே சாதகமானது. அமெரிக்க இராணுவ நிறுவனங்களின் ஒப்புதல்களும், சீன, ரஷ்ய ஆயுத உதவிகளும், இந்திய மத்திய அரசின் தேர்தல் முடிவுகளும் சிறீலங்காவைப் பலப்படுத்தியது. இது சிங்கள அரசின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை' நியாயப்படுத்தியது.
இந்த உலகமயமாக்கப்பட்ட இராணுவத் தந்திரங்களிற்கு முன்னால் சர்வதேசமும், ஐ.நாவும் நீந்தி வெளியேற முடியாமல் மூழ்கடிக்கப்பட்டது. இதுரூவண்டாவிலிருந்து 15 வருடங்களின் பின்பும் செறெப்ரெனிக்கா விலிருந்து 14 வருடங்களின் பின்பும் இன்று மீண்டும் சிறீலங்காவில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம் லூ குரியர் (சுவிஸ்) நன்றி:ஈழமுரசு
| |
 | |  |
|
|
|
|