TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » கட்டுரை » செய்தி ஆய்வு » இலங்கையின் 13வது...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

இலங்கையின் 13வது சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குகிறதா? பறிக்கிறதா?

[தமிழக நேரம் : June 30th, 2009 at 22:36]

இலங்கையின் 13வது சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குகிறதா? பறிக்கிறதா?

இலங்கை அரசின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட வில்லை. மாறாக சிங்களர்களுக்கு தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்குகிறது என்று,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். சென்னையில் கடந்த 26 ஆம் தேதி ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு என்ற தலைப்பிலும், 28 ஆம் தேதி தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் இது குறித்து அவர் ஆற்றிய உரை:

ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது சிறீலங்கா அரசு பேசி வருகிறது. மாபெரும் மனித இனப் படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போவதாக அவ்வப்போது கூறி வருகிறார். இனப்படுகொலைக்கு தூபமிட்டு உதவிகளை வழங்கி, உலக அரங்கில் அவமானப்பட்டுக் கிடக்கும் பார்ப்பனிய இந்திய ஆட்சியும் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என்று பேசி வருகிறது. இவர்கள் எல்லோருமே பார்ப்பன இந்து ஏடு உட்பட இப்போது அரசியல் தீர்வுக்காக ஒரு திட்டத்தை முன் வைத்துப் பேசி வருகிறார்கள். அரசியல் சட்டத்தில் - 1988 ஆம் ஆண்டு ஜெய வர்த்தனா கொண்டு வந்த 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தினாலே தமிழர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடும் என்று பேசி வருகிறார்கள். ஆனால், 13வது சட்டத் திருத்தத்தில் என்ன உரிமைகள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக் கூறவோ, விவாதிக்கவோ, இவர்கள் தயாராக இல்லை. உலகத்தின் அரசியல்களை எல்லாம் கட்டுரைகளாக வெளியிடும் சிங்களத்தின் அதிகாரபூர்வ ஏடாக செயல்படும் ‘இந்து’ ஏடும், 13வது சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது என்பதை விளக்கிட முன்வரவில்லை. பார்ப்பனப் பிடியில் சிக்கியுள்ள ஆங்கில ஊடகங்கள் எல்லாமுமே ஈழத் தமிழர் போராட்டங்களின் நியாயங்களை விவாதப் படுத்தவே இல்லை. திட்டமிட்டு, ஒரு சார்பாக இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊது குழல்களாகவே வெட்கமின்றி செயல்பட்டன.

1988 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இலங்கையின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போம். தோழர் களே! தமிழர்களை சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமைப்பட்டிருப்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதுதான் இந்த 13வது திருத்தம்.

இந்த சட்டத் திருத்தத்தின்படி தமிழர் பகுதியில் மாகாண கவுன்சில்களையும், அமைச்சர்களையும் நியமித்துக் கொள்ளலாம். ஆனால், அமைச்சர் களுக்கு அதிகாரங்கள் ஏதும் இல்லை. இலங்கை குடியரசுத் தலைவரால் மகாண கவுன்சிலுக்கு நேரடியாக நியமனம் செய்யப்படும் - ஆளுநருக்கு தான் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கள குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு உறுதுணையாக இருந்து அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் அமைச்சர் களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘உரிமை’. மாகாண கவுன்சில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நிர்வாகம் தடைபட்டால், மாகாண கவுன்சிலின் உரிமைகளை, இலங்கை நாடாளுமன்றம் முழுமையாக தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்துவிடலாம். எனவே அப்படி இலங்கை குடியரசுத் தலைவர் மாகாண கவுன்சிலை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும்போது அதை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை கிடை யாது. மாநில ஆளுநருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கி, அவருக்கு உதவியாக செயல் பட வேண்டும் என்பதன் அர்த்தம் - ஆளுநருக்கு, சேவகர்களாக அவர்கள் செயல்படவேண்டும் என்பதுதான். நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பொது ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரங்களும் ஆளுநருக்குத்தான் உண்டு; அமைச்சரவைக்கு அல்ல. மாகாண ஆளுநராக நியமிக்கப்படுபவர் நிதி மற்றும் பொது நிர்வாக அமைச்சருக்குரிய அதிகாரங்களோடு செயல்படு வார். அவரது ஆணைப்படி அமைச்சரவை செயல் படவேண்டும். அவர்கள் கூறும் சட்டங்களை இயற்ற வேண்டும்.
அதே போல் மாநில காவல்துறையைக் கட்டுப் படுத்தும் உரிமை - அமைச்சரவைக்கு இல்லை. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மாகாண காவல் ஆணையம் ஒன்றின் கட்டுப்பாட்டிலே தான் காவல்துறை செயல்படும். இந்த மூன்று உறுப் பினர்களில் தலைமை அதிகாரியை நியமிப்பவர் இலங்கையின் குடியரசுத் தலைவர். மாநில முதல்வரால் நியமிக்கப்படும் ஒரு பிரதிநிதியும் இதில் இருப்பார். ஆனால், காவல்துறையினருக்கு பயிற்சித் தரும் அதிகாரம் மாகாண கவுன்சிலுக்கு கிடையாது. இலங்கையின் மத்திய அரசு தான் பயிற்சிகளை அளிக்கும் மாகாணத்தின் பொது ஒழுங்குக்கு பொறுப்பு - காவல்துறை தான். மாகாண அமைச்சர்கள் இதில் தலையிட முடியாது. இதிலும் ஒரு அதிகாரி மீது தேசப் பாதகாப்புக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கவோ, விசாரணை நடத்தவோ, தடுப்புக் காவலலில் கைது செய்யவோ, காவல்துறை ஆணையத்துக்கும் உரிமை கிடையாது. இலங்கை யின் மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள தேசிய காவல்துறைப் பிரிவுக்குத்தான இந்த உரிமை உண்டு. இலங்கையில் இப்போதும் அமுலிலுள்ள பயங்கர வாத தடுப்புச் சட்டம் கொடூரமான பிரிவுகளைக் கொண்டது. பிரேதப் பரிசோதனைகூட நடத்தாமல் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை எரித்து விடலாம் என்கிறது இந்தச் சட்டம். சர்வதேச நீதிமன்றமே இந்தச் சட்டத்தின் கொடூரமான பிரிவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. நாகரிகம் உள்ள எந்த சமூகமும் தனது சட்டப் புத்தகத்தில் இது போன்ற சட்டங்கள் இடம் பெறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று சர்வதேச நீதிமன்றம் கூறியது. இலங்கை அரசுக்கு இதனால் என்ன மானம் கெட்டுப் போய்விடப் போகிறது? மானமற்ற கொடூரமான அரசு தானே? இந்த சட்டத்தை தமிழர் பகுதியில் அமுல்படுத்தும் உரிமையை இலங்கை அரசு தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறது.

தொடர்ச்சி


இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: செய்தி ஆய்வு
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 477
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 419
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 281
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 188
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 150
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
பிரித்தானிய இராணுவப் பொலிசார் அராஜகம் சிறுவர் குழந்தைகள் தூக்கி எறியப்பட்டனர்!
பிரித்தானிய இராணுவப் பொலிசார் அராஜகம் சிறுவர் குழந்தைகள் தூக்கி எறியப்பட்டனர்!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்