TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » ஆ‌ன்‌மிக‌ம் » சனிப் பெயர்ச்சி...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2009

[தமிழக நேரம் : September 28th, 2009 at 07:00]

சனிப் பெயர்ச்சி : கர்மாதிபதி என்று அழைக்கப்படும் சனி மிகவும் மெல்ல செல்லக் கூடியவர். ஒரு ராசிக் கட்டத்தில் இரண்டரை ஆண்டு தங்குவார். கஷ்ட நஷ்டங்களைக் கொடுத்து மனிதனைத் தன் எல்லையை உணரச் செய்வதும் சனி பகவானே. பல வளங்களை அள்ளிக் கொடுக்கக் கூடிய இவரே பல தொல்லைகளையும் கொடுக்கக்கூடியவரும் ஆவார். ஜோதிடத்தில் சனி ஆயுள், கடின உழைப்பு, வேதாந்த ஈடுபாடு, மனக் கட்டுப்பாடு, எலும்பு மற்றும் பாதங்களைக் குறிப்பார். ராசியிலிருந்து 3,6,11 வீடுகளுக்கு செல்லும் போது சனி நல்ல பலன்களைக் கொடுப்பார். இதர வீடுகளில் இருக்கும் போது கொடுக்கும் பலன் அவ்வளவு அனுகூலமாய் இராது. தங்கள் ராசி பலனைத் தெரிந்து கொள்ள...

 

 மேஷம்

 இந்தப் பெயர்ச்சி மூலம், சனி பகவான் 5ஆம் இடத்தை விட்டு வெற்றியை ஈட்டித் தரும் 6ஆம் இடத்துக்கு மாறுகிறார். உங்கள் மனத்தை அரித்துக் கொண்டிருந்த கவலைகள் யாவும் விலகுவதால், தெளிவாகத் திகழ்வீர்கள். மாணவர்கள் மந்த நிலை மாறிச் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். வேலையில் இருக்கும் பெண்கள் தங்களின் நல்ல பெயரை நிலைநிறுத்த வாய்ப்புகள் வந்து சேரும். சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். சிக்கலான விஷயங்களைத் தீர்க்கும் வழிகள் எளிதாகி விடும். ஆரோக்கியமான போட்டி மூலம் வியாபாரிகள் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். கலைஞர்கள் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாய் இருந்தால், வாழ்க்கை வசந்தமே! வழக்குகள் தீர்ந்த பின் உங்கள் வசம் வரும் பூர்வீகச் சொத்து, வீடு முதலியவற்றை முறையாகப் பராமரித்து வருவது அவசியம்.

 ரிஷபம்

 சனி பகவான் இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ராசியிலிருந்து 5ஆம் இடமான கன்னியில் அமர்கிறார். நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டால் உயர்வை அடையலாம். இல்லத்தில் பெரியவர்களால் சிறு மனஸ்தாபங்கள் அவ்வப்போது வந்து போனாலும், பெண்கள் எதையும் பொருட்படுத்தாமல் தன் பணிகளைச் செய்து வருவது நல்லது. மாணவர்கள் வீண் மனக்கோட்டை கட்ட ஆசைப்பட வேண்டாம். வியாபாரிகள் ஒப்பந்தங்களை ஏற்கும் முன் விதிமுறைகளை அறிந்துகொண்டு செயல்பட்டால், நஷ்டப்பட வேண்டியிராது. கலைஞர்கள் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தும் முன் அதனைப் பற்றிய முழுச் செய்திகளை தெரிந்துகொள்ளுதல் அவசியம். உங்களின் பண வரவிற்கு ஏற்றவாறு சேமித்து வையுங்கள். பொருளாதார உயர்வு சிறப்பாக இருக்கும்.
நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை : பொறுமை மற்றும் விடாமுயற்சி.

 மிதுனம்

 இந்தப் பெயர்ச்சி மூலம் சனி பகவான் 4ஆம் இடத்தில் அமர்கிறார். வேண்டாத விஷயங்கள் உங்கள் நிம்மதியைக் குலைக்காமல் இருக்க, மனத்தைக் கட்டுக்குள் வையுங்கள். மாணவர்கள் எதிர்பார்த்த சில சலுகைகள் பெயரளவிலேயே இருக்கும். பண வரவு சரளமாக இருந்த போதிலும், பெண்கள் வீண் செலவுகளை இழுத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரிகள் சச்சரவில் ஈடுபடும் பணியாளர்களைப் பக்குவமாகக் கையாளுங்கள். தொல்லைகள் படிக்குப் பாதியாகக் குறைந்து விடும். வருமான வரிச் சலுகைகளைப் பெற, பணியில் இருப்பவர்கள் சேமிப்பு விஷயங்களில் தகுந்த ஆலோசனையுடன் செயல்படுவது நலம். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ளவர்கள் சில விதிமுறைகளைக் கடைபிடித்து வந்தால், நிலைமை சீராக இருக்கும்.
நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை : நம்பிக்கை மற்றும் கவனம்.

 கடகம்

 சனி பகவான் இந்தப் பெயர்ச்சி மூலம் நன்மைகள் பல தரும் 3ஆம் இடத்தில் அமர்கிறார். இது வரை இருந்த பண இறுக்கம், மன இறுக்கம் இரண்டும் குறைந்து விடுவதால், பணியில் இருப்பவர்கள் புதிய தெம்புடன் திகழ்வார்கள். மாணவர்களின் பேச்சில் உள்ள தெளிவு, பிறரின் மதிப்பையும் நட்பையும் சம்பாதித்துத் தரும். எவ்வளவு நெருக்கடியான சூழலிலும், புன்னகையையே பதிலாகத் தருவதுடன், மன உறுதியுடனும் செயல்படும் தைரியத்தைப் பெண்கள் பெறுவார்கள். வியாபாரிகள் புதிய யுக்தி மற்றும் சக்தியோடு எதிரிகளை முறியடிப்பீர்கள். கலைஞர்களின் சிந்தனை வளத்தால், புதிய ஒப்பந்தங்கள் கை வசமாகும். வருபவற்றைத் தக்க வைத்துக்கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.

 சிம்மம்

 இந்தப் பெயர்ச்சி மூலம் சனி பகவான் 2ஆம் இடத்திற்கு மாறுகிறார். உங்கள் ஆரோக்கியம் குன்றாமல் இருக்க, உணவுப் பழக்க வழக்கத்தில் ஒவ்வாதவற்றை விலக்குவது புத்திசாலித் தனம். பண வரவுகள் சற்றே தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதால், பெண்கள் வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்வதுடன் பிறர்க்கு வாக்கு கொடுப்பதையும் தவிர்த்துவிடவும். கலைஞர்கள் சில விமர்சனங்களையும் கண்டனங்களையும் சந்திக்க நேரிடலாம். அமைதியாக இருந்தால் அனைத்தும் வலுவிழந்து விடும். பொறுப்புகளைச் சுமப்பவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தல் அவசியம். கலைஞர்கள் கடன் வாங்கி செலவு செய்தல், தேவையற்ற பொருட்களை வாங்குதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்..

 கன்னி

பெண்களுக்கு மனத்தில் இருந்த கவலை நீங்குவதுடன் உறவுகளும் ஆதரவாய் இருப்பார்கள். காலத்தின் மதிப்புணர்ந்து செயல்பட்டால், மாணவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். மனைகள் வாங்குதல், விற்றல் ஆகியவற்றில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிட்டும் வரை அவசரப்பட வேண்டாம். முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்கள், எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்னைகளைத் தவிர்த்து விடுவதோடு நல்ல பெயரும் பெறலாம். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும்.

 துலாம்

 இந்தப் பெயர்ச்சியில், சனி 12ஆம் இடம் செல்கிறார். சில தடைகளும் தாமதங்களும் மனத்தைச் சோர்வடையச் செய்தாலும், உறுதியோடு செயல்பட்டு வாருங்கள். எடுத்த முயற்சிக்கு ஏற்ற பலன் கிட்டும். மாணவர்கள் மற்றவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு நடக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்க, பெண்கள் உறவுகளின் குற்றம் குறைகளைப் பெரிது படுத்தாமல் இருப்பதே நல்லது. அலுவலக அளவில் கொடுக்கும் பணத்திற்கும், வாங்கும் பணத்திற்கும் சரியான விவரங்களை வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதைக் கலைஞர்கள் நினைவில் கொண்டால், வாழ்க்கை வளமாகும்.
நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை : தைரியம் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல்.

 விருச்சிகம்

 இந்தப் பெயர்ச்சி மூலம் சனி பகவான் நலம் பல தரும் 11ஆம் இடத்திற்குச் செல்கிறார். கிடப்பில் இருந்த பல திட்டங்கள் லாபகரமாக நடந்தேறும். பெண்கள் எடுக்கும் முடிவுகள் குடும்ப ஏற்றத்திற்கு அனுகூலமாக இருப்பதால், அனைவரின் பாராட்டையும் பெற்று மகிழ்வீர்கள். வியாபாரிகளின் முயற்சியால், நிறுவனம் புதுப் பொலிவுடன் செயல்படும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் செல்வாக்கை நல்ல விதத்தில் பயன்படுத்துதல் நல்லது. மாணவர்கள் புதிய உற்சாகத்துடன் படிப்பில் ஈடுபட்டு மதிப்பெண்ணை அள்ளுவர். கடன்களைத் தீர்க்க ஈடுபடும் முயற்சிக்கு நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல பலனிருப்பதால், தெம்பாகச் செயல்படுவீர்கள். கடின வேலை செய்வோர், உங்களின் ஆரோக்கியம், உணவு இரண்டிலும் தனிக் கவனம் செலுத்துவது அவசியம்.

 தனுசு

இந்தப் பெயர்ச்சியில் 9இல் இருந்து அருள் பாலித்துக் கொண்டிருந்த சனி 10ஆம் இடத்திற்குச் செல்கிறார். எந்த ஒரு விஷயமும், உங்களுடைய தீவிர முயற்சியின் பேரில் நிறைவான பலனைத் தரும் விதமாக மாறும். கடனுதவி கேட்டு நச்சரிக்கும் அக்கம்பக்கத்தினரைப் பெண்கள் பக்குவமாகக் கையாள்வது நல்லது. மாணவர்கள் சிறிய விஷயங்களுக்குச் சட்டென்று கோபப்படுவதைக் குறைத்துக்கொண்டால், படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் தடையின்றி நடக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மேலதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம். கூட்டாளிகளுடன் அனுசரித்துச் செல்லும் வியாபாரிகளுக்குப் பண வரவு சீராக இருக்கும்.நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை : தயாள குணம் மற்றும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்துதல்.

 மகரம்

 மாணவர்கள் அறிவுப் பூர்வமான கருத்துகளைப் பயன்படுத்தி, நல்ல பெயரைத் தட்டிக்கொண்டு செல்வர். பெண்கள் தங்கள் குடும்ப ஒற்றுமையைப் பிறர் குலைக்க இடம் கொடுக்க வேண்டாம். முதியவர்கள் எலும்புகளின் பலம் குறையாமல் பார்த்துக்கொண்டால், வேலைகளைச் சோர்வின்றிச் செய்யலாம். வியாபாரிகள் புது திட்டங்களில் உள்ள நிறை குறைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட்டால், அதிக லாபம் கிட்டும். கலைஞர்கள் தேவையற்ற செலவுகளைச் சுருக்கினால், பொருளாதாரம் கையைக் கடிக்காது. பொது வாழ்வில் இருப்போர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுபவரிடம் பணிகளைக் கொடுத்தால் வெற்றி உங்களுக்கே!

 கும்பம்

 வியாபாரிகள் தேவைக்கு ஏற்றவாறு சரக்குகளைக் கொள்முதல் செய்தால், எதுவும் தேங்காமல் விற்று விடும். பெண்கள் வீடு பராமரிப்பிற்கு என்று அதிகப் பணம் எடுத்து வைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் பிறரை வெல்லக் குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்கு வாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல்பாட்டைக் கடைப்பிடியுங்கள். நல்ல பெயர் நிலைத்திருக்கும். மறைமுகப் போட்டிகளால், புதுமையான எண்ணங்களை நடைமுறைப்படுத்துவதில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால், கலைஞர்கள் நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள்.

 மீனம்

 மாணவர்கள் சிறிய தவறுகளையும் உடனுக்குடன் சரிசெய்தால், படிப்பிற்கு எந்தப் பாதிப்பும் நேராது. பெண்கள் மனத்தில் பட்ட கருத்தைச் சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்துப் பக்குவமாகப் பேசுதல் அவசியம். பணியில் இருப்போர்கள் சில சில்லறைப் பிரசனைகளைச் சமாளிப்பதோடு சில சமயம் உழைப்பிற்குரிய பாராட்டைக் கேட்டுப் பெற வேண்டியிருக்கும். இந்த வாரம், தந்தை வழி உறவுகள் சற்றே அதிருப்தியைக் காட்டுவார்கள். கலைஞர்கள் அடுத்தவரின் விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே, பாதிப் பிரச்சினைகள் தீர்ந்து விடும். வியாபாரிகள் வங்கிகள் தரும் அறிக்கைகளைப் பத்திரமாக வைத்தால், அபராதத்தைத் தவிர்க்க முடியும்.

 

-திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்

இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: ஆ‌ன்‌மிக‌ம்
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 386
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 287
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 276
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 225
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 192
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் குறுஞ்செய்தி(ஸ்Mஸ்) தகவல் மையம் அமைப்ப
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் குறுஞ்செய்தி(ஸ்Mஸ்) தகவல் மையம் அமைப்ப
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்