TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » இலங்கை இலங்கை RSS Feed

ஆலோசனை வழங்குவதற்கான குழு திட்டமிட்டபடி அமையும்! பான் கீ மூன் சிறிலங்காவுக்கு பதிலடி

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரான பான் கீ மூன் தன்னால் சிறிலங்கா விடயம் தொடர்பில் ஆலோசனை வழங்கவென அமைக்கப்படவிருந்த நிபுணர்கள் குழு திட்டமிட்டபடி அமைக்கப்படும் எனவும் அணிசேரா அமைப்புக்கள் அதனை தவறாக விளங்கிக்கொண்டன எனவும் தெரிவித்துள்ளார். அதுபற்றிய விளக்கத்தை தான் நேரடியாக வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விரிவு »

மக்கள் விடுதலைக்காக வீழ்ந்தோரை நினைவில் நிறுத்தி முடிவுகளை எடுக்கவேண்டும் - செல்வம் அடைக்கல

எமது மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் ஆன்மாக்களின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க தமிழ் மக்கள் ஒருமித்த பலத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
விரிவு »

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம்

தமிழ் தேசிய கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் பற்றி உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனிநாட்டுக்கான கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள இவ் ஊடகங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட தீர்வு பகிரப்பட்ட இறையாண்மையை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளன.
விரிவு »

ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் - ஐ.தே.க வேட்பாளர் திருமதி மகேஸ்வ

ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையில் தீர்வு திட்டம் முன்வைக்கப்படவேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இதனை வலியுறுத்தவேண்டிய தேவையும் அவசியமும் எழுந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்மாவட்ட வேட்பாளர் திருமதி மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விரிவு »

மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!

வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் சிறீலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு குறித்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டது.

விரிவு »

பொன்சேகாவுடனான தனிப்பட்ட பகைக்கு பழிதீர்க்கும் வகையில் அவரை கைது செய்யவில்லை

தனது தனிப்பட்ட பகைக்கு பழிதீர்க்கும் நோக்கில் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதாக பிரசாரப்படுத்தப்பட்டுவரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை எனவும் பொன்சேகாவின் கைது தெளிவான அரசியல் தீர்மானம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
விரிவு »

சரத் பொன்சேகா உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்

இலங்கையில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமக்கு தொலைபேசி வசதிகள் தரப்படவில்லையென்று கண்டனம் தெரிவித்து ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விரிவு »

இந்தியாவுக்கு வருமாறு மகிந்தவுக்கு மன்மோகன் சிங் அழைப்பு: நிருபமா ராவ் ஊடாக அறிவிப்பு

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரைவில் இந்தியா வருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத் துள்ளார். ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளிவிகாரச் செயலர் நிரூபமா ராவ் ஊடாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
விரிவு »

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் சிங்கள மயமாக்கல் விளக்குகிறார் இரா. சம்பந்தர்

இலங்கைத்தீவில் எந்த இடத்திலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடாது. அதற்கமைவாக மகிந்த அரசானது மறைமுகமான திட்டம் ஒன்றை வைத்து தமிழ் மக்களின் பிரதேசங்களை சிங்கள மயப்படுத்தி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
விரிவு »

தமிழருக்கான தீர்வை கூட்டமைப்பு தயாரித்துள்ளது - சுரேஸ் பிரேமசந்திரன்

சுயநிர்ணய அடிப்படையில் ஐ.நா.சபை நெறிமுறை ஊடாக உருவாக்கப்பட்ட மனித குழுமங்களுக்கு அதிகாரங்கள் என்ற ரீதியில் இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரித்துள்ளதாக அதன் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விரிவு »
1 2 3 4 5 Next page
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 403
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 289
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 279
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 250
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 228
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
சிறீலங்காவிற்கு 804 மில்லியன் ரூபா உதவித்தொகை- ஐரோப்பிய ஒன்றியம்
சிறீலங்காவிற்கு 804 மில்லியன் ரூபா உதவித்தொகை- ஐரோப்பிய ஒன்றியம்
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்