சிங்கள இராணுவத்தின் கொலை வெறி: மற்றுமொரு காணொளி சாட்சியம்
[தமிழக நேரம் : January 26th, 2010 at 15:05]
சிங்கள இராணுவத்;தினர் தமிழiர் மீது மேற்கொள்ளும் இனஅழிப்பு நடவடிக்கை ஒன்றும் புதியது அல்ல. தற்போது அண்மையில் மற்றுமொரு காணொளி ஒன்று வடஇந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனை அவர்கள் தமது இணையத் தளத்தில் பதிவுசெய்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அக்காணொளயில் தமிழ் பெண்போராளிகளை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வதைப்போன்ற காட்சிகள் இருப்பதாகவும் நிர்வாணப்படுத்திய பெண்போராளிகளின் உடலை இழுத்துகொண்டு செல்வது போன்ற காணொளிகளும் காணப்படுவதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை சிலமாதங்களுக்கு முன்னர் பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி இவ்வாறான ஆதாரம் ஒன்றினை வெளிப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எனினும் சிறீலங்கா இராணுவத்தினர் வழமைபோல இதனை மறுத்துள்ளமை தெரிந்ததே.
தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியை பார்க்க
வீடியோ இணைப்பு 1
வீடியோ இணைப்பு 2
|