TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » இலங்கை » புலிகளை...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

புலிகளை முற்றுகைக்குள் கொண்டுவந்த படைப்பிரிவு விஜயபாகு படையணி என்று அறிவிப்பு!

[தமிழக நேரம் : February 4th, 2010 at 07:40]

புலிகளை முற்றுகைக்குள் கொண்டுவந்த படைப்பிரிவு விஜயபாகு படையணி என்று அறிவிப்பு!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை முற்றுகைக்குள் கொண்டுவந்த சிறிலங்கா இராணுவத்தினரின் படைப்பிரிவு விஜயபாகு காலாற்படையணி என்று சிறிலங்கா இராணுவத்தளபதி லெப்ரினென்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய அறிவித்துள்ளார். குருனாகல் போயகன பிரதேசத்தில் அமைந்துள்ள அந்த படைப்பிரிவின் தலைமையகத்துக்கு சென்ற இராணுவ தளபதி இந்த அறிவிப்பை விடுத்து அந்த படையணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கால கட்டத்தில் வன்னியின் கிழக்கு பகுதியில் நந்திக்கடலுக்கு அருகைமையில் இடம்பெற்ற உச்சக்கட்ட சமரில் சிறிலங்கா இராணுவத்தின் விஜயபாகு காலாற்படையணி நாலாவது படைப்பிரிவினரே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அவரது மெய்பாதுகாவலர்கள் அணியை முற்றுகையிட்டு தாக்கியதாகவும் -

முகமாலை முன்னணி காலரண் பகுதியில் பொறுப்பாக இருந்த 53 ஆவது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையிலான படைப்பிரிவும் விஜயபாகு காலாற்படையணியுடன் இணைந்து கடைசி போரில் கடும் சமர் புரிந்ததாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையிலான அணியினரை முற்றுகைக்குள் கொண்டுவந்த சிறிலங்கா இராணுவத்தின் படையணிகள் தொடர்பாக முதலில் பல்வேறு குழப்பங்கள் நிலவியதாகவும் இது தொடர்பாக அனைத்து கள தகவல்களையும் உள்வாங்கி ஆராய்ந்ததில் விஜயபாகு காலாற்படையணியின் நாலாவது படைப்பிரிவே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையிலான அணியினரை முற்றுகைக்குள் கொண்டுவந்து தாக்கி அழித்தது என்ற முடிவை இறுதியில் தாம் பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர் இடம்பெற்ற மூன்று வருட காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் அனைத்து முன்னரங்கு நிலைகளின் மீதான தாக்குதல்களிலும் விஜயபாகு காலாற்படையணியினரே முக்கிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் ஆனாலும் இன்று நடைபெறுகின்ற சிறிலங்காவின் 62 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் அந்த படையினருக்கு சிறிலங்கா அரசு அந்த அங்கீகாரத்தையும் வழங்கவில்லை என்று கொழும்பை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் சமீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: இலங்கை
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 579
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 486
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 298
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 205
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 164
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
தேர்தல் பிரசாரத்துக்கான புதிய வியூகத்துடன் ஜெனீவா புறப்படவுள்ள மகிந்த!
தேர்தல் பிரசாரத்துக்கான புதிய வியூகத்துடன் ஜெனீவா புறப்படவுள்ள மகிந்த!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்