TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » இலங்கை » பொதுத்தேர்தலில...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

பொதுத்தேர்தலில் 'புளொட்' தனித்து போட்டியிடவுள்ளதாம்: சித்தார்த்தன் தெரிவிப்பு

[தமிழக நேரம் : February 8th, 2010 at 14:36]

பொதுத்தேர்தலில் 'புளொட்' தனித்து போட்டியிடவுள்ளதாம்: சித்தார்த்தன் தெரிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புளொட்டும் தனித்து போட்டியிடப்போவதாக அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஆளும் மகிந்த அரசுக்கு தாம் தொடர்ந்து ஆதரவளித்துவருகின்றபோதும் வடபகுதியில் போட்டியிடவுள்ள தமது கட்சி தனித்தே களத்தில் குதிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமது கட்சியின் கொள்கைகளுக்கு ஒத்துப்போகும் தமிழ் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் உடன்படிக்கையை செய்து கொள்ள தயார் என்று தெரிவித்துள்ள சித்தார்த்தன், 80 களிலிருந்து விடுதலைப்புலிகளின் கொள்கைகளை எதிர்த்துவரும் தமக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு உள்ளது என்றும் பெருமை பேசியுள்ளார்.

நடந்து முடிந்த வவுனியா நகரசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் கூட்டமைப்பினைவிட தமது கட்சி 140 வாக்குகளே குறைவாக கிடைத்தாகவும் மக்கள் தமது கட்சியில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் மகிந்த அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தலிலும் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தமை மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் மகிந்த நடத்திய தேர்தல் பிரசார கூட்டத்தில் மகிந்த, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் சித்தார்த்தன் மேடையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: இலங்கை
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 579
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 486
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 298
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 205
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 164
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
இறுதி வணக்க நிகழ்வுகள்: திருமாவளவன் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இறுதி வணக்க நிகழ்வுகள்: திருமாவளவன் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்