TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » இலங்கை » போர்க்குற்றங்க...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார்! பொன்சேகா அறிவிப்பு!!

[தமிழக நேரம் : February 8th, 2010 at 21:41]

போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார்! பொன்சேகா அறிவிப்பு!!

சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்பு தனது மறுப்பினை தெரிவிப்பதற்கு உயர் மட்டக்குழு ஒன்றினை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு அனுப்பியுள்ள நிலையில் பொன்சேகாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் மேலும் தெரிவிக்கையில் - சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக எனக்கு தெரிந்தவை, நான் கேள்விப்பட்டவை, எனக்கு தெரியப்படுத்தப்பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளேன். போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்" - என்று கூறியுள்ளார்.

சரணடைந்த விடுதலைப்புலிகள் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறியதற்காக சிறிலங்கா அரசு தரப்பினால் துரோகி என்று வர்ணிக்கப்படுவது பற்றி பொன்சேகாவிடம் கேட்டபோது - "உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்" - என்று பதிலளித்துள்ளார்.

Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: இலங்கை
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 403
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 289
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 279
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 250
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 228
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
ஓவியர் புகழேந்தியின் ”உயிர் உறைந்த நிறங்கள் - தமிழீழத்தின் இரத்தப்பதிவு”  ஓவியக் காட்சி!
ஓவியர் புகழேந்தியின் ”உயிர் உறைந்த நிறங்கள் - தமிழீழத்தின் இரத்தப்பதிவு” ஓவியக் காட்சி!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்