யாழ் நல்லூரில் மகிந்தவிற்கு நல்லாசி வேண்டி வழிபாடு!
March 9th, 2012 at 18:15
மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு நல்லாசி வேண்டி நல்லூர் கந்தசுவாமி கோவிலிலும் யாழ் நாகவிகாரையிலும் விசேட பூசை வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் காலையிலும் நாகவிகாரையில் மாலையிலும் வழிபாடுகள் நடைபெற்றன. இவ் விசேட பூசை வழிபாடுகளை நாளைய இளைஞர் அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பினர் நடாத்தினர்.
நாகவிகாரையில் நாளைய இளைஞர் அமைப்பு தமிழ் பௌத்த சங்கம். முப்படையினர் இணைந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதில் படையினர்மற்றும் காவல்துறையினர் அதிகளவில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|