TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » இலங்கை » 13 திருத்த...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

13 திருத்த சட்டமூலத்திற்கு எதிராக ஜே.வி.பி சுவரொட்டிப் பரப்புரை!

[தமிழக நேரம் : July 3rd, 2009 at 12:12]

13 திருத்த சட்டமூலத்திற்கு எதிராக ஜே.வி.பி சுவரொட்டிப் பரப்புரை!

சிறீலங்கா அரசு காலத்தைப் போக்குவதற்கு கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படும் 13வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக மற்றொரு இனவாதக் கட்சியான ஜே.வி.பியும் குரல் கொடுத்துள்ளது.

13வது திருத்த சட்ட மூலத்தில் மாகாண சபைக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட இருப்பதாகக் கூறிய சிங்கள இனவாதக் கட்சியான, பௌத்த பிக்குகளைக் கொண்ட ஜாதிக ஹெல உறுமய, அரசில் இருந்து வெளியேற இருப்பதாக எச்சரித்திருந்தது.

தற்பொழுது இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஜே.வி.பி, அரசின் நடவடிக்கைக்கு எதிராக இன்று கொழும்பில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் இந்தியாவின் அழுத்தம் இருப்பதாக, ஜே.வி.பியின் சுவரொட்டிகளில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர், அதிகாரப் பரலாக்கல், “வணங்கா மண்” கப்பல் உட்பட சில உறுதிமொழிகளை இந்தியாவிற்கு வழங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: இலங்கை
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 649
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 512
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 315
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 241
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 175
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
போரின்போது படையினர் மேற்கொண்ட காரியங்களுக்கு தான் பொறுப்பெற்பதாக பொன்சேகா தெரிவிப்பு
போரின்போது படையினர் மேற்கொண்ட காரியங்களுக்கு தான் பொறுப்பெற்பதாக பொன்சேகா தெரிவிப்பு
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்