பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரத்ன தெரிவு!
பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ண தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.பாராளுமன்றம் இன்று (08-07- 2008)காலை கூடியபோது பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க பிரதி சபாநாயகர் பதவிக்காக பாரளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்னவின் பெயரை முன் மொழிந்தார்.
முன்னர் இப்பதவியை வகித்த கீதாஞ்சன குணவர்தண அண்மையில் இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகவிருந்த பிரதி சபாநாயகர் பதவிக்கே பிரியங்கர ஜயரத்ண தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்: செல்வி
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info