சிறீலங்கா அரசின் பிரதம நாடாளுமன்ற கொறடாவாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நியமனம்!
சிறீலங்கா அரசின் பிரதம நாடாளுமன்ற கொறடாவாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல் செயற்குழு நேற்று இதற்கான முடிவை எடுத்திருந்தது.
ஏப்ரல் 6ஆம் நாள் கம்கஹாவில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே வகித்த இந்த பதவியை யாருக்கு வழங்குவது என்பதில் இழுபறிநிலை காணப்பட்டது.
மகஜன எக்சத் பெரமுன என்ற கட்சியின் தலைவரான தினேஸ் குணவர்த்தனவுக்கு இந்தப் பதவியை வழங்குமாறு, சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவே நேற்றைய கூட்டத்தில் முன்மொழிந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
1956இல் டட்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, பிலிப் குணவர்த்தன தலைமையிலான விப்லவாகர லங்கா சமசமாஜக் கட்சியியுடன் கூட்டிணைந்திருந்தார்.
இந்த கூட்டணி மகஜன எக்சத் பெரமுன என்று அழைக்கப்பட்டது.
பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிலிப் குணவர்த்தன, தனது கட்சிக்கு மகஜன எக்சத் பெரமுன என்ற பெயரையே தெரிவு செய்திருந்தார்.
மகஜன எக்சத் பெரமுனவின் தலைவர் பிலிப் குணவர்த்தன சாவடைந்த பின்னர், அவரது மகன் தினேஸ் குணவர்த்தன அந்தக் கட்சியின் தலைவராக இருக்கின்றார்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info