|
|
|
கேலிச்சித்திரம்
விளம்பரங்கள்


|
|
|
|
|
முகப்பு »
இலங்கை
» வடக்கில் விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும்- டக்ளஸ் தேவானந்தா |
|
|
| | |
|
 | |  |
|
வடக்கில் விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும்- டக்ளஸ் தேவானந்தா
விரைவில் வடக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துவருவதாக வடக்கிற்கான விசேட செயலணிக் குழுவின் தலைவர் அமைச்சர், டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படாத நிலையில், வடமாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட முன்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
யாழ் மாவட்ட மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டால் அது பயனுள்ள ஒன்றாக அமையுமெனவும், தமது பிரதிநிதிகளை அங்குள்ள மக்கள் தேர்ந்தெடுத்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச்செல்ல முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வடக்கில் தேர்தல்களை நடத்தக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது என இராணுவத்தினர் அறிவித்ததும், அங்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
வடக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் வடமாகாணத்துக்கான தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் 90 நாட்களுக்குள் சிவில் நிர்வாகத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
செய்மதி தொழில்நுட்பம் ஊடாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உத்தியோகத்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர், அங்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 75 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்துவது, போக்குவரத்து வசதி மற்றும் பொருட்களை மன்னாருக்கு எடுத்துச் செல்வதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக அமைச்சர், மன்னார் மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |
 | |  |
 | |  |
|
இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
| |
 | |  |
|
|
|
|