TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » இலங்கை » வவுனியா தடுப்பு...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

வவுனியா தடுப்பு முகாமில், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 2 அப்பாவித்தமிழர்கள் படுகொலை

[தமிழக நேரம் : July 1st, 2009 at 10:48]

வவுனியா தடுப்பு முகாமில், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 2 அப்பாவித்தமிழர்கள் படுகொலை

செட்டிகுளத்தில் அமைந்துள்ள இராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிக்கும் முட்கம்பிகளுக்கூடாக, தடுத்து வைத்திருந்தவர்கள் வெளியே செல்வதைத் தடுக்கும் முயற்சியில், ஞாயிறு காலை, சிறிலங்கா இராணுவர்கள் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டும் பலர் காயப்படுத்தப்பட்டும் உள்ளார்கள், என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.


ஆரம்பத்தில், இராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிப்பதற்கு வேலி அமைக்கப்பட்டபோது, தரைக்கு நேராகச் செல்லும் முள்கம்பிகளால் அமைக்கப்பட்டன. இரண்டு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள், இவ் முட்கம்பிகளுக்குள் ஒரு உள்புகும் வழியை அமைத்து பிரித்து வைக்கப்பட்டிருந்த தமது குடும்ப அங்கத்தவர்களைப் பார்த்து வந்தார்கள்.


இப்படியான உட்புகும் பாதை அமைக்கப்பட்ட போதெல்லாம், மக்களை இரண்டு முகாம்களுக்கும் இடையே மாறி மாறிச் செல்வதைத் தடுப்பதற்காக, அது பின்பு அடைக்கப்பட்டு வந்தது.


ஆனால், மக்கள் தொடர்ந்து தமது பாதையை இவ்வேலிகளுக்கூடாக அமைத்துச் மாறி மாறி சென்று வந்தார்கள். அதனால், அதிகாரிகளோ வழமையான வேலியை முள்கம்பி வேலிகளைப் பாவித்து குறுக்கும் நெடுக்குமாக அமைத்து மேலும் வலுப்படுத்தியிருந்தார்கள்.


இதனால், வெறுப்பும், ஆத்திரமும் கோபமுமடைந்த தடுத்து வைக்கப்பட்டிருந்தோர், பலப்படுத்திய முள்கம்பிகளுக்குள்ளாகவும் பிரித்து வைக்கப்பட்டிருந்த தமது உறவினரைப் பார்ப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை முயற்சிசெய்த போதே சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: இலங்கை
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 649
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 512
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 315
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 241
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 175
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
தமிழ் மக்களுக்கு உதவுமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மாயா அழைப்பு: ஸ்கை செய்திகள்
தமிழ் மக்களுக்கு உதவுமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மாயா அழைப்பு: ஸ்கை செய்திகள்
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்