TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » இலங்கை இலங்கை RSS Feed

த.தே.கூ.நா.உறுப்பினர் அரியநேந்திரனிடம் சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறை விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் சிறிலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 விரிவு »

விடுதலைப் புலிகள் இராணுவ பலத்தை இழந்துள்ளனர் எனக் கூறுவது தவறு:ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்

விடுதலைப் புலிகளைக் குறைத்து மதிப்பிட்டு, அவர்கள் இராணுவ பலத்தை இழந்துவிட்டார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது. ஆனால், பூநகரியைப் புலிகள் இழந்ததில், அவர்கள் பின்னடைவை எதிர்கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
 விரிவு »

பூநகரி சமர்;படையினரின் 8 அதிகாரிகள் உட்பட 54 படையினர் பலி,350 பேர் காயம்!

பூநகரி சமர் படையினரின் 8 அதிகாரிகள் பலி,54 இராணுவம் பலி,350 பேர் காயம்!
பூநகரிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் சிறிலங்கா படையின் எட்டு அதிகாரிகள் உட்பட 54 போ் கொல்லப்பட்டுள்ளனர். 350 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 விரிவு »

ரணில் டில்லி பயணம்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி பயணமானார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்த இந்தப் பயணத்தை ரணில் விக்கிரமசிங்க நேற்று மேற்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது.

 விரிவு »

பூநகரியால் யாழ். செல்லலாம்: கொழும்பில் தமிழர்களிடம் சிறிலங்கா படையினர் பகிடிவதை

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வீதிச்சோதனை சாவடியில் கடமையில் நிற்கும் காவல்துறையினரும் படையினரும் தமிழர்களை பார்த்து பூநகரி வரையான ஏ௩2 பாதை திறக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் செல்வதற்கு தயாராகுங்கள் என்று கூறி பகிடிவதை புரிந்து வருகின்றனர்.
 விரிவு »

பூநகரி கைப்பற்றப்பட்டதற்கு சிறிலங்காவில் வெடி கொழுத்தி ஆரவாரம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகரி பிரதேசத்தை சிறிலங்கா படையினர் கைப்பற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து கொழும்பிலும் சிங்கள கிராமங்களிலும் வெடி கொழுத்தி கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது.
 விரிவு »

சங்குப்பிட்டி கேரதீவு ஊடாக தரைப்பாதையை திறக்க வாய்ப்பு:படைத்தரப்பு தெரிவிப்பு!

பூநகரியை நேற்று சனிக்கிழமை காலை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் பூநகரி வீதியை "ஏ32' கைப்பற்றும் நோக்கில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்றுக் காலை பூநகரியை முழுமையாகக் கைப்பற்றியதன் மூலம் மன்னார் பூநகரி வீதி படையினரின் பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
 விரிவு »

பூநகரி வெற்றியை ஒரு வார விழாவாக கொண்டாடுகிறது சிறிலங்கா அரசு

தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதற்கு தலைநகர் கொழும்பிலும் சிங்கள கிராமங்களிலும் தொடர் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பூநகரி ஊடாக செல்லும் ஏ32 வீதியை படையினர் முழுமையாக கைப்பறிய செய்தியை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடாக இன்று சனிக்கிழமை இரவு அறிவித்ததுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சவால் விடுத்துள்ளார்.
 விரிவு »

பூநகரியை கைப்பற்றிய படையினருக்கு மகிந்த வாழ்த்து தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பூநகரியை கைப்பற்றியதற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது படையினருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
 விரிவு »

இருதரப்பும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்தாலே மீண்டும் கண்காணிப்பு பணி: ICRC

ஓமந்தை நுழைவாயில் கண்காணிப்புப் பணியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேற்று புதன்கிழமை ஈடுபடவில்லையென அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜயவர்தன தெரிவித்தார்.
 விரிவு »
1 2 3 4 5 அடுத்த பக்கம்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்