TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » இலங்கை » துணுக்காய், உயிலங்குளம் பகுதிகளை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு !
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
துணுக்காய், உயிலங்குளம் பகுதிகளை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு !

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் மற்றும் உயிலங்குளம் பகுதிகளை அரசாங்கப் படைகள் மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தினரின் 57வது படைப்பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
விடுதலைப் புலிகளுக்கு மிகவும் முக்கிய பகுதியாக விளங்கிய துணுக்காயை நோக்கி நேற்று முதல் இராணுவத்தினர் முன்நகர்வுகளை ஆரம்பித்திருந்ததாக அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளான்குளம்- மாங்குளம் வீதியின் மையப் பகுதியில் துணுக்காய் நகர் அமைந்திருப்பதுடன், துணுக்காயிலிருந்து வடக்கில் 5 கிலோமீற்றர் தொலைவில் உயிலம்குளம் அமைந்துள்ளது.

அண்மைய வெற்றிகள் மூலம் விடுதலைப் புலிகளின் கோட்டையெனக் கருதப்படும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகின்றமை தெளிவாகிறது என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.

இதேவேளை, துணுக்காய் மற்றும் உயிலங்குளம் பகுதிகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டமை குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.
 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்