தமது கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ சிறிலங்கா அரசு புறக்கணிப்பதனால் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தாம் மேற்கொண்டு வந்த முயற்சிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவர் ஜேர்ஜென் வீத் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் கூறியதாவது:
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு என ஜேர்மனி தொரிவித்து வரும் கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ தற்போதைய அரசு செவிமடுப்பதில்லை.
இலங்கையில் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்திற்கு அதிகாரங்களை வழங்கும் என்பதில் ஜேர்மனி நம்பிக்கை இழந்துள்ளது.
எந்த ஒரு அரசும் ஆட்சிபுரியும் போது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். ஒரு சமூகத்திற்கு ஆதரவு வழங்குவதை விடுத்து எல்லா சமூகங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு சிறிலங்கா அரசு சட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையின் ஜனநாயகத்தை அனைத்துலக சமூகம் மதித்தே வந்துள்ளது. ஆனால் தற்போது அந்த நன்மதிப்பு சீர்குலைந்துள்ளது என்றார் அவர்.
-புதினம்
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info