|
சப்பிரகமூவா, வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி!
சப்பிரகமூவா மாகாணசபைக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகளின்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 472,789 வாக்குகளைப் பெற்று 25 ஆசனங்களை இந்த மாகாணத்தில் வென்றுள்ளது.
எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 346,321 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி.) 19,068 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் வென்றுள்ளன.
வடமத்திய மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 307,457 வாக்குகளைப் பெற்று 20 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 205,284 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களையும், ஜே.வி.பி. 26,738 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் வென்றுள்ளன.
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |