ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மின் தந்தி போராட்டம்! மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைப்பு!
ஊடக அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து பேச்சு சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்றைய தினம் மின் தந்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கொழும்பு கோட்டை டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இன்று (ஜூலை 7) இந்த எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தினால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் கடத்தப்படல், தாக்குதல் மேற்கொள்ளல் மற்றும் படுகொலை தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் போத்தல ஜயந்த தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்கள் அச்சமின்றி தமது தொழிலை மேற்கொள்ளக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info