பொலநறுவை மாவட்டம் ஹிங்குராக்கொட வனப்பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி
பொலநறுவை மாவட்டம் ஹிங்குராக்கொட வனப்பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிங்குராக்கொட தியாபெதும் வனப்பகுதியிலேயே இப்புதைகுழி இனம்காணப்பட்டுள்ளது.
தியாபெதும் வனப்பகுதிக்கு வேட்டைக்குச்சென்றிருந்தவர்கள் அங்கு குழி ஒன்றை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அக்குழியை அகழ்ந்தபோது மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
இப்பகுதியில் சிறிலங்காவின் மூன்றாவது வான்படைத்தளம் அமைந்திருப்பதோடு இப்பகுதியிலேயே சிறிலங்கா துணைஇராணுவக்குழுவான கருணாகுழுவின் முகாம்கள் அமைந்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த எலும்புக்கூடுகள் கடந்த சில ஆண்டுகளால் சிறிலங்காப் படையினர் மற்றும் ஒட்டுக்குழுவினரால் கடத்தப்பட்டு காணமற்போனவர்களுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info