அவுஸ்திரேலியாவில் வர்த்தக கல்லூரி அதிபரான தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியப் பொலிஸாரால் கைது!
அவுஸ்திரேலியாவில் வர்த்தக கல்லூரி அதிபரான தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மெல்போன் நகரில் தனியார் வர்த்தக கல்லூரி ஒன்றை நடாத்தி வரும் துளசிதரன் சந்திரராஜா (வயது 34) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதங்கள் சேகரித்தார்கள் என்ற வழக்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. இதனால் வழங்கப்பட்ட தகவலை ஆதாரமாக வைத்தே சந்திரராஜா அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info