TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » இலங்கை » உதயன்...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

உதயன் பத்திரிகைக்கு இனிமேல் தடையில்லை: மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதம்!

[தமிழக நேரம் : July 1st, 2009 at 10:59]

உதயன் பத்திரிகைக்கு இனிமேல் தடையில்லை: மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதம்!

யாழ் குடாநாட்டிலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை தடையின்றி வெளிவருவதற்கு அந்தப் பத்திரிகை ஆசிரியரிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதமளித்துள்ளார். 

கடந்தவாரம் நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததுடன், இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் சில பத்திரிகை முகவர்களுக்கு துண்டுப்பிரசுரமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த விடயத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றதுடன், சுடர் ஒளி, உதயன் ஆசிரியர் என்.வித்தியாதரனுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்றுக்கும் ஏற்பாடு செய்துகொடுத்திருந்தார்.

இந்த நிலையில், சுடர் ஒளி, உதயன் ஆசிரியர் என்.வித்தியாதரனுடனான சந்திப்பிலேயே மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவாதத்தை அளித்தார்.

எந்தவித அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாமல் உதயன் நிறுவனம் சுதந்திரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தனது அரசாங்கம் எடுத்திருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: இலங்கை
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 477
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 419
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 281
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 188
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 150
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன்; அது அவர்களின் அன்னை பூமி
அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன்; அது அவர்களின் அன்னை பூமி
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்