TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » புலம்பெயர்தமிழர் » அறிவித்தல்கள் » இன்பத்தமிழொலியை...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

இன்பத்தமிழொலியை வளர்த்திடுவோம்‏!

[தமிழக நேரம் : July 3rd, 2009 at 08:27]

அவுஸ்திரேலிய தமிழ் உறவுகளிடம் ஒரு நிமிடம்....!!!!

அன்பான எம் இனிய உறவுகளே.!

புலம்பெயர் தேசத்தில் எவ்வளவோ வசதிகளுடனும் சந்தோசத்துடனும் வாழ்ந்தாலும் யாரும் நிம்மதியாக வாழவில்லை என்பது உண்மை.

எத்தனை வருடங்கள் ஆனாலும் எந்தகைய நிலைவரினும் எம் தாயக நினைவுகளும் உடன் பிறந்த உறவுகளின் நினைவுகளும் எம் இதயத்தை விட்டு அகலாதவை.

புலம் பெயர் தேசங்களின் அந்த நாட்டு கலாச்சாரங்களை அனுசரித்து வாழ்ந்தாலும் முழுமனதோடு அதை ஏற்று மாறி வாழ்வோர் நம்மில் சிலரே.

எத்தகைய நிலையிலும் தாய் மண்ணின் நினைவு சுமந்து தாய் மொழி மறவாது தமிழன் என்ற கலாச்சாரம் அழியாது பண்பாடு மறவாது வாழ்வோர் நம்மில் பலர் இருக்கிறோம்.

அந்த வகையில் புலம்பெயர் தேசங்களில் எம் இனத்தின் அடையாளம் அழிந்துவிடாமல்,எம் தாய்மொழி தமிழின் அழகு அழியாமல் பண்பாடு செத்துப்போகாமல் காப்பதற்கு தமிழ் ஊடகங்கள் அவசியம்.

அது வானொலியாகவோ,பத்திரிகையாகவோ இல்லை தொலைக்காட்சியாகவோ இருக்கலாம்.

அவுஸ்திரேலியாவை பொறுத்தவரையில் இந்த மூன்றும் இருக்கிறது.
வானொலியாக "இன்பத்தமிழொலியும்",பத்திரிகையாக "ஈழமுரசும்" தொலைக்காட்சியாக "ஜி டி வி" யும் தங்களின் காத்திரமான பணிகளை எமக்காக செய்துவருகின்றன.

பல தடைகளையும் பல சவால்களையும் சந்தித்து அவற்றை துணிவோடு எதிர்கொண்டு இந்த மூன்று ஊடகங்களும் செய்யும் பணி
பாராட்டுதற்குரியது.

அந்த வகையில் நாம் ஏற்கனவே "ஈழத்தமிழர்களின் ஊடகங்களையும்",கலைஞர்களையும் ஊடகவியலாளர்களையும் ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடவேண்டும் என கேட்டிருந்தோம்.
நம்மில் பலர் அதை செய்துகொண்டும் இருக்கிறோம்.

இப்போது அவுஸ்திரேலிய மண்ணில் வானொலி ஊடகமாக நம் எல்லோரிடத்தும் பெரிதும் நெருங்கி உறவாடும் வானலை ஊடகமாக " இன்பத்தமிழொலி" இருப்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ கூடாது.

கடந்த கால புலம்பெயர் தமிழர்களின் போராட்ட களங்களில் மக்களை ஒருங்கிணைக்கும் பாரிய பணியில் "இன்பத்தமிழொலி" முக்கிய பங்கு வகித்ததை யாவரும் அறிவோம்.

"யாதார்த்தவாதி வெகுசனவிரோதி" என்பது போல பலவாறான விமர்சனக்களுக்கு உள்ளான "இன்பத்தமிழொலியும்" தொடர்ந்தும் தன் பணிகளை செய்வது பாராட்டுதற்குரியது.
 
வானொலி ஊடகமாக "இன்பத்தமிழொலி" அவுஸ்திரேலிய தமிழ் உறவுகளை மாத்திரமில்லாமல் நியுசிலாந்து மண்ணில் வாழும் தமிழ் உறவுகளிடமும் தன் சேவைகளை செய்துகொண்டிருக்கிறது.
 
கடந்த 14 வருடமாக ஒரு புலம் பெயர் நாட்டிலே பல தடைகளையும் தாண்டி,விமர்சனங்களையும் தாண்டி ஊடகம் ஒன்றை முன்னெடுத்து செல்வது என்பது மிகப்பெரிய சவால்.இதை ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் அனுபவரீதியாக உணர்ந்து இருக்கிறேன்.
 
இன்பத்தமிழொலியை முன்னின்று வழிநடாத்தும் திரு.பாலசிங்கம் பிரபாகரன்(பிரபா அண்ணா) தனிப்பட்ட முறையில் பல்வேறான விமர்சனங்களுக்கு உட்பட்டாலும்,அவரின் ஊடகப்பணி என்பது மிகவும் சிரமமானது சிக்கலானது சவாலானது.அவரோடு ஊடகவியலாளனாக பல்வேறான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தனிப்பட்ட ரீதியாக அவரோடு பழகியவன் என்ற ரீதியில் அவரின் இந்தப்பணி மிகவும் காத்திரமானது இந்த மண்ணுக்கு தேவையானது.
 
பிரபா அண்ணா செய்யும் "ஆனந்த இரவு" எனும் வெள்ளி இரவு கருத்துப்பகிர்வு நிகழ்ச்சி மிகவும் ஜனரஞ்சகமானது.பலரின் விமர்சனங்களுக்கும் உள்ளாவது.என்னைப்பொறுத்தவரையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஒரு சமூகத்தின் திறந்த மனதும் அதன் உள்மனதும் வெளிப்படுகிறது என்றே சொல்லுவேன்.இதன் போது பல காத்திரமான மாற்றங்கள் இந்த சமூகத்தில் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால் தனிப்பட்ட ரீதியாக பிரபாகரன் சொல்லும் சில கருத்துக்களோடு முரண்பாடுகள் இருக்கிறது.அது எனக்கும் இருக்கிறது.ஆனால் ஒரு ஊடகவியலாளானாக எனது பார்வையில் அவ்வாறு அவர் விமர்சனம் செய்யப்படுவது யதார்த்தம் என்றே நினைக்கிறேன்.
 
பல்வேறுபட்ட கருத்துக்களுடன் மோதியும் ஆதரித்தும் பேசும் போது சில இடங்களில் சற்று கருத்து விலகல் ஏற்படலாம்.இது யதார்த்தம்.இது ஒரு ஊடகவியலாளனின் பண்பு.இதில் பிழை இல்லை.
 
புலம்பெயர் தேசத்தில் பல்வேறான பணம் புரளும் நிலை உள்ள சமுதாய அமைப்பில் இவ்வாறான சேவை நோக்கம் கருதிய பணி என்பது மிகக்கடினமானது.இதையே முழுநேரப்பணியாக செய்வதும் அதைவிட கடினமானது.

அந்த வகையில் "இன்பத்தமிழொலியும்" தன் சமுதாயத்தின் தேவை உணர்ந்து காலம் உணர்ந்து கடமை உணர்ந்து பல சேவைகளை கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் செய்து வருகிறது.இந்தப்பணி தொடர வேண்டுமெனில் நேயர்களாகிய எங்கள் கைகளிலும் ஒரு பங்கு உள்ளது.வெறுமனே வானொலியை கேட்கின்ற நேயராக மட்டும் இல்லாது வானொலியின் முன்னேற்றத்துக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆத்மார்த்தமாக பங்களிப்பு செய்ய வேண்டும்.

இதை நான் சொல்லியோ இல்லை பாலசிங்கம் பிரபாகரன் சொல்லியோ செய்யாமல் நாங்களாக உணர்ந்து செய்வது சாலச்சிறந்தது.
 
இந்த வானொலியில் பணிபுரியும் மற்ற அறிவிப்பாளர்களின் தன்நலமற்ற சேவையும் பாராட்டுதற்குரியது.அவர்களின் அந்த பணியும் சேவையும் மனச்சஞ்சலம் இன்றி தொடர எங்களின் பங்களிப்பு மிக மிக அவசியம்.
 
வருடாவருடம் இன்பத்தமிழொலி வளர்ச்சி நிதியுதவியை மனமார உணர்ந்து செய்யுங்கள்.அதை இன்றே செய்யுங்கள்.புலம் பெயர் தேசத்தில் எதிர்கால சந்ததிக்கு தமிழின் அடையாளங்களை பாதுகாத்துக்கொடுப்போம்.
 

www.inbathamil.com.au

 
24 மணிநேர இன்பத்தமிழொலியூடாக பல்வேறான தமிழ் சமூக பிராந்திய வானொலிகள்(தமிழோசை,தமிழ்க்குரல்,தமிழ்சேவை) ஒலிபரப்பப்படுகிறது.
அத்தோடு பி.பி.சி தமிழோசையும்(BBC) அதிகாலை வேளை மீள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

அத்தோடு மட்டும் இல்லாமல் புலிகளின் குரல், ஐ.பி.சி(IBC),கனேடிய தமிழ் ஒலிபரப்பு போன்றவற்றின் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படுகிறது.
 
 
மேலதிக தொடர்புகளுக்கு:
 
பாலசிங்கம் பிரபாகரன்

மின்னஞ்சல்:inbathamil@gmail.com

கலையக தொலைபேசி:+61297982994

கையடக்க தொலைபேசி:+61425324953

 NOTE: யாருக்கேனும் ஏதாவது அன்பளிப்பு செய்ய ஆசைப்பட்டால்,அது பிறந்த நாளாகவோ இல்லை திருமண நாளாகவோ இருக்கலாம் அப்போது "இன்பத்தமிழொலியை" அவர்களுக்கு கொடுங்கள்.அது நிச்சயம் அவர்களுக்கு மிகச்சிறந்த அன்பளிப்பாகவிருக்கும்.

இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: அறிவித்தல்கள்
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 370
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 283
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 252
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 211
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 181
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி: ராகுல் நம்பிக்கை
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி: ராகுல் நம்பிக்கை
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்