TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » புலம்பெயர்தமிழர் » கறுப்பு யூலை 25ம் ஆண்டை அடையளப்படுத்தி ரொறன்ரோவில் இளையோர் மாநாடு (படம் இணைப்பு)
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
கறுப்பு யூலை 25ம் ஆண்டை அடையளப்படுத்தி ரொறன்ரோவில் இளையோர் மாநாடு (படம் இணைப்பு)

கறுப்பு யூலை 25ம் ஆண்டை அடையளப்படுத்தி ரொறன்ரோவில் இளையோர் மாநாடு (படம் இணைப்பு)

தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் கலைத் தொழில்நுட்பக் கல்லுரி ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் இளையோர் மாநாடு ஒன்றினை ஞாயிற்றுக்கிழமை யூலை 27இல் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

1983ம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலையின் 25ம் வருட நிறைவை நினைவுகொள்ளும் வேளையில் எமது வரலாற்றை எம் தமிழ் கனேடிய இளையோரிடம் எடுத்துச் செல்லும்வண்ணம் ‘வேர்களைத் தேடி..’ என்னும் தலைப்பின் கீழ் இம் மாநாடு நடைபெற்றது.












இம் மாநாட்டிற்கு ஏற்கனவே இளையோரிடம் பதிவுகள் பெறப்பட்டு முன்பதிவு செய்யப்பட்ட நிகழ்வாக இது நடைபெற்றது.

இம் மாநாட்டிற்கு ஐக்கிய அமெரிக்காவில் இருந்து மருத்துவ கலாநிதி எலைன் சான்ட்லர், கலாநிதி யமுனா சங்கரசிவம் ஆகியோருடன் கலாநிதி ஜோசப் சந்திரகாந்தனும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தனர்.



இதில் மருத்துவ கலாநிதி எலைன் சான்ட்லர் சுனாமி நேரத்தின் போது தமிழீழப் பிரதேசத்திற்குப் பயணம் செய்து அதன் பின்னர் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக ஈடுபாடுகொண்டு தமிழர் தொடர்பாக தன்னார்வம் கொண்டு செயற்படுபவராவார்.

இம்மாநாட்டில் தமிழ்கனேடிய அடையாளம், உலகநாடுகள் தழுவிய வகையில் தமிழர் மற்றும் தமிழின் நிலை, சமவுரிமை: எம் சமூகத்தில் தமிழ்ப் பெண்கள், கனடியத் தமிழ் இளையோரை எதிர்மறையாகக் காட்சிப்படுத்தும் விடயங்கள், தமிழ் திரைப்படங்களும் அவைமூலம் எம் சமூகம் பெற்றுக்கொள்பவையும் மற்றும் அமைதியாக்கப்பட்ட குரல்கள்: 1983இலிருந்து இன்றுவரை போன்ற தலைப்புக்களில் பட்டறைகள் நடத்தப்பட்டன.




இந்நிகழ்வில் தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் இளையோரை எதிர்மறையாகக் காட்சிப்படுத்தும் விடயங்கள் தொடர்பான பட்டறை ஒன்றினை நடத்தியிருந்தனர். இப்பட்டறை பிரதான ஊடகங்கள், கல்வித்துறை மற்றும் நீதித்துறை ஆகியவை எதிர்மறையாகக் காட்சிப்படுத்தப்படுவது தொடர்பானதாக அமைந்திருந்தது. இப்பட்டறையை வழக்கறிஞர் ஹரினி சிவலிங்கம் நடத்தினார்.






இம்மாநாட்டினை ஒழுங்கு செய்திருந்த மூன்று அமைப்புக்களும் நிகழ்வின் இறுதியில் தமது அமைப்புக்களைப் பற்றிய விபரணங்களைச் செய்ததுடன் மாநாடு நிறைவுபெற்றது.






 நிருபர்:ஈழச்செல்வன்
 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்