TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » புலம்பெயர்தமிழர் » நோர்வேயில் கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
நோர்வேயில் கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

நோர்வேயில் கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

நோர்வே தலைநகரம் ஒஸ்லோவில் 25.07.2008 அன்று வெள்ளிக்கிழமை, நகரின் மையப்பகுதியான Youngstorget என்ற இடத்தில் கறுப்பு யூலையின் 25வது ஆண்டு நினைவு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

சிறீலங்கா அரசின் இனவெறிக் கொடுமைகளைச் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியுடன், இந்நிகழ்வு நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமானது. கொழுத்தும் வெய்யிலிலும், நோர்வேஜியர்கள் மட்டுமல்லாது பல வெளிநாட்டவர்களும் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

அத்துடன் 2000 அதிகமான நோர்வேஜிய மொழியில் கறுப்பு யூலை துண்டுப் பிரசுரமும் நோர்வேஜிய மக்களுக்கு வழங்கப்பட்டது.


தொடர்ந்து பி.ப. 5.00 மணியளவில் தமிழ் இளைஞர்கள் இணைந்து தமிழும் ஆங்கிலமும் கலந்த பாணியில் ஓர் தமிழீழ விடுதலைப் பாடலையும், இன்னுமோர் இளம் தமிழ்ப் பெண் ஆங்கிலத்தில் ஓர் சுதந்திரதாகப் பாடலையும் பாடினார்.


அதனைத் தொடர்ந்து, நோர்வேயில் சில அமைப்புகளில் பணியாற்றும் நோர்வேஜியர்களும், குர்டிஸ்தான் இனத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணும், தமிழர்களுக்கு சிறீலங்காவில் நடக்கும் கொடுமைகளையும், தமிழர்களுக்கான சுதந்திரத்தின் அவசியத்தையும் பற்றி தெளிவான உரைகளை ஆற்றினார்கள்.


 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்