தரிசனம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்த இலங்கை அரசாங்கம் சதி!
ஐரோப்பாவில் இயங்கி வரும் ஈழத்தமிழ் தொலைக்காட்சியான தரிசனம் தொலைக்காட்சி தற்பொழுது இலங்கை அரசாங்கம் இதன் ஒளிபரப்பு அனைத்தையும் முடக்கும் வேலையில் இறங்கியுள்ளது. ஈழத்தமிழர்களின் அவலங்களை புலம்பெயர் மக்களுக்கு எடுத்து வந்த ஊடகமான தமிழ் ஓளி (ttn) இலங்கை அரசால் நிறுத்தப்பட்டவுடன், தரிசனம் தொலைக்காட்சி ஐரோப்பாவிற்கு தனது ஒளிபரப்பினை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை அரசாங்கம், இலங்கையில் மட்டும் அல்லாது புலம்பெயர் நாடுகளிலும் தனது ஊடக அடுக்கு முறையினை மேற்கொண்டு வருகின்றது. ஈழத்தமிழர்களின் அவலங்களை எந்த ஊடகம் அம்பலப்படுத்தி வந்தாலும் அதனை முடக்கி வருகின்றது.
தரிசனம் தொலைக்காட்சியினை நிறுத்துமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதனை ஈழத்தமிழர்கள் அனைவரும் வன்மையாக கண்டனம் செய்து வருகின்றார்கள்.
தமிழ்செய்தி ஐரோப்பிய நிருபர்- ஈழக்கண்ணன்
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
|