Tamilseythi.com
முகப்பு எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழீழம்
இலங்கை
தமிழகம்
உலகம்
சினிமா
கட்டுரை
புலம்
நேர்காணல்
காணொளி
முகப்பு » தமிழீழம் தமிழீழம் RSS Feed

யாழ்.பல்கலை துணைவேந்தர் அலுவலகம் மாணவர்களால் சுற்றிவளைப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகம் மாணவர்களால் தாக்கப்பட்டதோடு அவரது உருவப்படமும் மாணவர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை மாணவர் ஒன்றியச் செயலாளர் யாழ்.கலட்டிச் சந்தியில் வைத்து இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டார்.
விரிவு »

இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி

ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3Mம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.
விரிவு »

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கோண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
விரிவு »

முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல! யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் சுவரொட்டிகள்!

யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் வகையில் நேற்றிரவு யாழ். பல்கலைக்கழக சதுக்கத்தில் பல்வேறு இடங்களில் சிங்கள இனவாத அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டிகளை மேற்கொண்டனர் .பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்றழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் இந்த சுவரொட்டி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
விரிவு »

கேணல் ரமேஸ் படுகொலை புதிய ஆதாரம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸ் படுகொலையின் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலைசெய்யப்பட்டதை புகைப்படங்கள் ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
விரிவு »

இழந்தவைகளுக்கு நிகரான தீர்வு எமக்கு வேண்டும் - யாழ். குடாநாட்டு மக்கள்

ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்திய, தமிழக உறவுகளுக்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை புலம்பெயர் தமிழர்களும் இந்திய உறவுகளும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் யாழ். குடாநாட்டு மக்கள் கோரியுள்ளனர்.

விரிவு »

போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து பொறுப்பானவர்களிடம் விசாரிக்கவேண்டும்! சனல்4

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளி ஆதாரங்களுடன் பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற தலைப்பில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு குறித்த ஆவணப்படம் சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.
விரிவு »

பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் மறுப்பு தெரிவிக்கவில்லை?

பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் மறுப்பு தெரிவிக்கவில்லை?விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இரணுவத்தினரால் நீதிக்குப் புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, சனல்-4 ஆவணப்படம் சுமத்தும் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் இன்னமும் நிராகரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவு »

இங்கிலாந்து கிறிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமா?

இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளேவர் இலங்கையின் கிறிக்கெட் மைதானங்கள் தொடர்பாக ஆராய இன்று இலங்கைக்கு பயணமாகவுள்ளார். இந்த நிலையில், சனல்4 தொலைக்காட்சியின் நிருபர் பென் டி பியர், இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முன், அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கையின் இறுவெட்டு ஒன்றினைக் கையளிக்குமாறு அவரிடம் கேட்டுள்ளார்.
விரிவு »
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 38
சென்னை - மெரினாவில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்
Page Views: 34
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் - மாணவிகளது கன்னித் தன்மை பரிசோதிக்கப்படுகிறதா?: சஞ்சீவ பண்டார
Page Views: 31
இலங்கையின் கொலைக்களங்கள்! 2ம் பாகம் - "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" காணொளி
Page Views: 31
“கோத்தாவின் போர்” வெளியிட முன்னரே நாடாளுமன்றில் கிளம்பிய சர்ச்சை!
Page Views: 27
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மறைப்பு
RANDOM PICK
சிந்திய குருதியும், தியாகங்களும் வீண் போகாது! தமிழீழம் ஒரு நாள் உருவாகும்! கருணாநிதி
சிந்திய குருதியும், தியாகங்களும் வீண் போகாது! தமிழீழம் ஒரு நாள் உருவாகும்! கருணாநிதி
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 Tamilseythi.com