TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » தமிழீழம் » யாழ்....
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

யாழ். பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள மாணவர்களுக்கு அனுமதி

[தமிழக நேரம் : February 8th, 2010 at 09:37]

யாழ். பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள மாணவர்களுக்கு அனுமதி

யாழ் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பிற மாவட்ட சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் முன்னர் சென்று கல்வி கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், போர் சூழல் காரணமாக அது சாத்தியப்படவில்லை என்று கூறியுள்ள காமினி சமரநாயக்க -

தற்போது அங்கு கல்வி கற்பதற்கு பல மாணவர்கள் ஆர்வம் காட்டியிருப்பதால் யாழ் பல்கலைக்கழகத்திற்கான பிற மாவட்ட மாணவர் அனுமதி கோட்டாவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக கூறியள்ளார்.

தற்போது நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் 21 ஆயிரம் மாணவர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இவர்களில் 1900 பேர் யாழ் பல்கலைக்கழகத்துக்கு வெளிமாவட்டங்களில் இருந்து உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்த கோட்டாவை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: தமிழீழம்
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 599
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 478
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 288
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 201
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 125
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
பிரித்தானியாவின் போர்நிறுத்தக் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு
பிரித்தானியாவின் போர்நிறுத்தக் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்