வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 5 படையினர் பலி; 7 பேர் காயம்
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. பாலமோட்டை குஞ்சுக்குளம் ஊடாக நேற்று வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் சிறிலங்காப் படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் எம்.ஐ௨4 ரக தாக்குதல் உலங்குவானூர்தியின் சூட்டாதரவுடன் முன்நகர்வினையும் ஊடுருவல் நடவடிக்கையினையும் மேற்கொண்டனர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் ஐந்து படையினர் கொல்லப்பட்டனர். ஏழு படையினர் காயமடைந்தனர்.
படையினரின் உடலம் உள்ளிட்ட படைப் பொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
நேற்றிரவு வரை படையினரின் முன்நகர்வுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் தொடர்ந்தது.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info