வவுனியாவில் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 18 படையினர் பலி- 31 பேர் காயம்
வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 18 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 31 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் மற்றும் படைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
பாலமோட்டையில் இருந்து மும்முனைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பிலான முன்நகர்வுகளைத் தொடங்கினர்.
இதில் படையினர் இருமுனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் காலை 7:00 மணியளவில் முறியடிக்கப்பட்டன.
ஒருமுனையில் படையினரின் முன்நகர்வு முறியடிப்புத் தாக்குதல் இன்று பிற்பகல் 3:45 மணிவரை நீடித்தது.
இம்முனையும் பின்னர் முறியடிக்கப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
இம் முறியடிப்புத் தாக்குதலில் 18 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 31 படையினர் காயமடைந்துள்ளனர்.
படையினரின் 3 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு கடுமையாக சிதைந்துள்ளன.
ரி56௨ ரக துப்பாக்கிகள் - 03
பைகள் - 03
தண்ணீர் கொள்கலன்கள் - 06
ரவைக்கூடுதாங்கி அணிகள் - 03
ரவைக்கூடுகள் - 08
மற்றும் ரவைகள் கைக்குண்டுகள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info