முகமாலை முன்னரங்க நிலைகளில் படையினர் புலிகள் கடும் மோதல்
முகமாலை முன்னரங்க நிலைகளில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் நேற்று மாலை கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் பாரிய இழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினரின் முன்னரங்க நிலைகள் மீது புலிகள் திடீர் தாக்குதல்களை மேற்கொண்டதை அடுத்தே இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த மோதல்கள் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு நீடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் புலிகளின் தாக்குதலை முறியடித்து விட்டதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இருதரப்பினருக்கும் இடையில் சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற மோதலில் பரஸ்பரம் எறிகணைத்தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. .
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info