|
பூநகரி ப.நோ.கூ. சங்க கிளைகள் கிளிநொச்சிப் பகுதியில் திறப்பு!
சிறிலங்காப் படையினரின் தொடர்ச்சியான எறிகணை வீச்சு மற்றும் இராணுவ நடவடிக்கைகளினால் முழங்காவில் ஜெயபுரம் பிரதேசத்திலிருந்து முட்கொம்பன், செக்காலை, அரசபுரம் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வியாபார நடவடிக்கை ஆரம்பித்த பூநகரி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் 15 இற்கும் மேற்பட்ட கிளைகள் மீண்டும் படைநடவடிக்கையால் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளன.
முட்கொம்பன் பகுதியிலிருந்து கிளைகள் அனைத்தையும் கிளிநொச்சிப் பிரதேசத்தில் திறந்து வியாபார நடவடிக்கைகளை ஆரம்பத்தில் தலைவர், பொதுமுகாமையாளர், நிர்வாகிகள் தீவிரகவனம் செலுத்தி செயற்பட்டுவருகின்றனர். இதுவரை திருநகர், நிர்வாகிகள் தீவிரகவனம் செலத்தி செயற்பட்டு வருகின்றனர்.
இதுவரை திருநகர், உதயநகர், முறிப்பு, கூளாவடி, ஆனந்தபுரம், ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் செறிந்து வாழ்வதால் அப்பகுதிகளில் பூநகரி ப.நோ.கூ.சங்கத்தின் கிளை நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் கடந்த இருநாட்களாக நடைபெற்றுவருகின்றன. கூட்டுறவுச் சங்கம், எரிபொருள் நிலையம் ஆகியன திருநகர்ப் பகுதியில் இயங்க ஆரம்பித்துள்ளன. வட்டக்கச்சிப் பகுதியிலும் இருகிளைகள் நாளை திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |