TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » தமிழீழம் » துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோ தாக்குதல்கள் முறியடிப்பு
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோ தாக்குதல்கள் முறியடிப்பு

துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோ தாக்குதல்கள் முறியடிப்பு

துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்புப் கொமாண்டோப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பினரின் மூன்று உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

துணுக்காய் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோப் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர்.இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.

இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் படைப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு நாட்களின் முன்னர் வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோப் படையினரின் தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பினரின் இரு உடலங்கள் கைப்பற்றப்பட்டன என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 

 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்