TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » தமிழ்நாடு » முன்னர் செய்த...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

முன்னர் செய்த ஒப்பந்தங்களின்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க கோருகிறார் கருணாநிதி!

[தமிழக நேரம் : February 4th, 2010 at 07:42]

முன்னர் செய்த ஒப்பந்தங்களின்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க கோருகிறார் கருணாநிதி!

இலங்கையில் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டவாறு தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து தரப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

"தி.மு.க. செயற்குழு,​​ பொதுக்குழு கூட்டங்கள் இந்த மாதம் 20 ஆம் திகதி நடக்கும்.​ இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட உறுதி மொழியை நிறைவேற்ற இலங்கை அரசு முன்வரவேண்டுமென வலியுறுத்தியும்,​​ அதற்கு ஆவன செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

"தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தருவதாக காஞ்சிபுரம் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.​ மத்திய அரசும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது.

"ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்வது தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்தின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.​ இப்பிரச்சினையில் மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எதனையும் அறிவித்துவிடமாட்டோம்.

"சோனியா காந்திக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று நான் கூறியதாக நினைவில்லை.​ இவ்வளவு பெரிய பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை.

"தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் வந்து என்னை சந்தித்தபோது,​​ கடற்கரை பாதுகாப்பு போன்ற பிரச்னைகளில் கருத்துகள் பரிமாறிக் கொண்டோம். தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்களும்,​​ இலங்கை ராணுவமும் தொடர்ந்து தாக்குவது பற்றி கவலையையும்,​​ கண்டனத்தையும் தெரிவித்தேன். இலங்கையில் விரைவில் தமிழர்களுக்கு உரிமைகள் பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் அரசியல் திருத்தம் வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினேன்.​ ​

"ஆயுதங்களுடன் நுழைய எவருக்கும் அனுமதியில்லை:​ இலங்கையில் போர் முடிந்த பிறகு விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் தமிழகத்திற்கு வருவதாக புகார் கூறப்படுகிறது.​ விடுதலைப்புலிகளாக இருந்தாலும்,​​ அவ்வாறு இல்லாத தமிழர்களாக இருந்தாலும்,​​ யாரும் ஆயுதங்களுடன் தமிழகத்தில் நுழைந்து செயல்பட அனுமதி இல்லை" - என்றார் முதல்வர் கருணாநிதி.

இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: தமிழ்நாடு
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 579
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 486
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 298
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 205
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 164
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாளர் விமானப்படை தளபதி ஜயலத் வீரக் கொடி?
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாளர் விமானப்படை தளபதி ஜயலத் வீரக் கொடி?
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்