|
"தமிழக மீனவர் மீது கச்சதீவில் தாக்குதல் மீன்களை அபகரித்த இலங்கை கடற்படை'
ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் பலர் மீன் பிடிக்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து சனிக் கிழமை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
சனிக்கிழமை இரவு கச்ச தீவுப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கைக் கடற்படையினர் 5க்கும் மேற்பட்ட படகுகளில் ஏறி அவர்களின் படகில் இருந்த இறால், மீன்கள், நண்டு, கணவாய் ஆகியவற்றை அபகரித்து படகில் இருந்த மீனவர்களைத் தாக்கிவிட்டு திரும்பிச் சென்றுவிட்டதாக ராமேஸ்வரம் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இதுகுறித்து ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, இலங்கைக் கடற்படை தாக்குதல் குறித்து ராமேஸ்வரம் படகு உரிமையாளர் யாரும் எந்தப் புகாரும் அளிக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
ஆதாரம்-தினக்குரல்
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |