TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » தமிழ்நாடு » தமிழகம் மதுரையில் ஈழத்தமிழர்கள் நடமாடத் தடை!
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
தமிழகம் மதுரையில் ஈழத்தமிழர்கள் நடமாடத் தடை!

தமிழகம் மதுரையில் ஈழத்தமிழர்கள் நடமாடத் தடை!

கலைஞரின் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, தமிழகம் மதுரையில் ஈழத்தமிழர்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும், மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி, அங்கு இடம்பெறும் இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்கின்றார்.

இதனை முன்னிட்டு, மதுரை ஆனையூர், திருவாதவூர், உச்சப்பட்டி
ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் நலன்புரி நிலையங்களில்,
ஏதிலிகளாக தங்கியுள்ள ஐயாயிரத்து தொள்ளாயிரத்து
நாற்பத்தொன்பது ஈழத்தமிழர்கள், இரண்டு நாட்களுக்கு வெளியில்
நடமாடுவதற்கு மாநில காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஆத்துடன் மூன்று பகுதிகளிலும் உள்ள நலன்புரி நிலையங்களிலும்
தமிழக காவல்துறையினரும், ‘கியூ| புலனாய்வுப் பிரிவினரும்
இணைந்து, சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு,
கணிசமான ஈழத்தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சரின் பாதுகாப்புக் கருதியே, இவ்வாறான
நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிபுரிந்த குற்றச்சாட்டின் கீழ்,
கடந்த ஆறு மாதங்களில், மதுரையில் பதின்மூன்று அப்பாவி
ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.
 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்