TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » தமிழ்நாடு » நளினி மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்ய இந்திய மத்திய,தமிழக அரசுகளுக்கு உத்தரவு
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
நளினி மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்ய இந்திய மத்திய,தமிழக அரசுகளுக்கு உத்தரவு

நளினி மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்ய இந்திய மத்திய,தமிழக அரசுகளுக்கு உத்தரவு

விடுதலை செய்யக் கோரி ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளி நளினி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 17 ஆண்டுகளாக வேலூர் சிறையிலிருக்கும் நளினி தன்னை விடுவிக்கக் கோரி கடந்த 2006 ஆம் ஆண்டிலும் சில மாதங்களுக்கு முன்பும் இரு மனுக்களை தாக்கல் செய்தார்.

இந்த இரு மனுக்களையும் நீதிபதி நாகமுத்து விசாரித்து வருகிறார். நேற்று இந்த மனுக்கள் மீது இறுதி விசாரணை நடந்தது. அப்போது இதற்குப் பதில் மனுத் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரச வழக்கறிஞர்கள் அவகாசம் கோரினர்.

இதையடுத்து 11 ஆம் திகதி வரை அவகாசம் தந்த நீதிபதி அன்று இந்த வழக்கில் இறுதி விசாரணை நடக்கும் என அறிவித்தார்.

இந்த வழக்கில் நளினியின் விடுதலையை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இந்தக் கொலை வழக்கில் முன்னதாக நளினிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை மனுத்தாக்கல் செய்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்