|
தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சு - இராமதாசும் கண்டம்
[தமிழக நேரம் : July 3rd, 2009 at 12:35]
தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
சிங்களர்களின் கோபத்தை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி பேசியிருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது என்று பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறீலங்கா அதிபர் ராஜபக்ச நடத்திய இனப்படுகொலை குறித்து, பா.ம.க கட்சியின் தலைவர் ஜி.கே.மணி சட்டப்பேரவையில் விரிவாக எடுத்துக் கூறிய பின்னர், கருணாநிதி இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.
இதேவேளை, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ஈழத்தமிழ் மக்கள் பிரச்சினையில் குத்துக் கரணம் அடித்திருப்பதாக, இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் தனித் தமிழீழம் தான் தீர்வு எனக்கூறவந்த அவர், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் நேற்று வெளியிட்ட கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளன.
முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்வது பற்றியும், இந்திய ஊடகங்கள் கரிசனை செலுத்தியுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உரிய நேரத்தில் சரியாகச் செயற்பட்டிருந்தால், வன்னியின் இறுதிக்கப்பட்டப் போரில் இழக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் உயிர்களையாவது காப்பாற்றி இருக்கலாம் என கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
| |