தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீகாந்தா - தமிழக அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு!
தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. என்.ஸ்ரீகாந்தா தமிழக அரசியல் தலைவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினதும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினதும் தமிழ் மாநிலத் தலைவர்களை சனிக் கிழமை சந்தித்துப் பேசியதாக ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வன்னிப் பகுதியில் அரசு மேற்கொண்டுள்ள கொடூர யுத்தத்தால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து தமிழகக் கட்சிகள் குரலெழுப்ப வேண்டுமென ஸ்ரீகாந்தா கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம், இன்று பாரதீய ஜனதாக் கட்சியையும் மறுமலர்ச்சி தி.மு.க. மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் தமிழகத் தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றைய சந்திப்பில் ஸ்ரீகாந்தா எம்.பி.யுடன் கூட்டமைப்பு எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேநேரம், நேற்று ஞாயிற்றுக் கிழமை சென்னை நகரில் தீவுத் திடலில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 47 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீகாந்தா எம்.பி. அவருக்கு வீரவாள் பரிசளித்த அதேநேரம் செல்வம் அடைக்கலநாதன் அவருக்கு மலர்ச்செண்டு வழங்கி வாழ்த்தியுள்ளார்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info