திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ராமலிங்கம் சில நாட்களுக்கு முன் மர்ம ஆசாமிகளால் தாக்கப்பட்டார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் மருத்துவமனையில் நேற்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ அஞ்சாமல் சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வருவது தமிழகத்தில் தொடர்கிறது. ஏற்கனவே எங்கள் கட்சியை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இப்போது நீதிமன்ற வளாகத்திலேயே ராமலிங்கம் தாக்கப்பட்டுள்ளார். எங்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவது பற்றி முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றும், தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. காவல் துறையில் ஒரு பகுதியினர் சமுக விரோதிகளோடு கூட்டு வைத்துள்ளனர். ஒரு சில அரசியல் வாதிகள் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இனிமேல் தாக்குதல் நடந்தால், நாங்கள் மனு போட்டுக்கொண்டு இருக்க மாட்டோம். சுயமாக நாங்களும் நடவடிக்கை எடுப்போம். எங்கள் கட்சியை சேர்ந்த சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டிருப்பது கவலையளிப்பதாக உள்ளது. இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info