TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » தமிழ்நாடு » விடுதலைபுலிகளை...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

விடுதலைபுலிகளை தொடர்ந்து ஆதரிப்போம்: வைகோ

[தமிழக நேரம் : June 29th, 2009 at 10:32]

விடுதலைபுலிகளை தொடர்ந்து ஆதரிப்போம்: வைகோ

விழுப்புரம் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக செயல் வீரர்கள் கூட்டம் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை ஜெயம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் ஏ.கே.மணி தலைமை தாங்கினார். செயலாளர் ஜானகிராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ம.தி.மு.க. காட்டாற்று வெள்ளத்தினையும், சூறைக்காற்றினையும் தாண்டி பல தோல்விகளை கடந்து எழுச்சியுடன் எழுந்து நிற்கின்றது. ஆதலால் தோல்வியைப்பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை.

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு சோனியா தலைமையிலான மத்திய அரசும், அதற்கு உறுதுணையாக இருந்த கருணாநிதியும் காரணம் ஆகும். 5 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கு ஆயுதம் அனுப்பியது. தமிழக சட்டமன்ற தீர்மானத்தை ராஜபக்சே காலில் போட்டு மிதித்தது. இதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்றைக்கு வணங்காமண் கப்பலில் உள்ள உணவு பொருட்களை இறக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறுகிறார்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையைப்போல உலகத்தில் வேறு எங்கும் நடந்தது கிடையாது. ம.தி.மு.க. தொடங்கியபோது இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று கூறினோம். இன்றைக்கும் அதனைத்தான் கூறுகின்றோம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கின்றார்.

தமிழ் இருக்கும் வரை, மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை தொடர்ந்து தமிழ் ஈழத்தையும், விடுதலைபுலிகளையும் ஆதரிப்போம்.

இவ்வாறு வைகோ பேசினார்.

(TNC)

Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: தமிழ்நாடு
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 335
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 245
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 237
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 180
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 147
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்காத நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்!
பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்காத நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்