|
துருக்கியில் குண்டு வெடிப்பு 14 பேர் பலி- 100 பேர் காயம் (படம் இணைப்பு)
துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 14 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (27.07.2008) இரவு 22.00 மணியளவில் இஸ்தன்பூல் என்ற இடத்தில் இடம்பெற்றதாகவும், அங்கு 14 பேர் குண்டு வெடித்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும்,100 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவருகின்றது.
இது ஒரு தீவிரவாதிகளின் தாக்குதல் என துருக்கி நாட்டு காவல்துறையினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
நிருபர்:செல்வி
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |