பாகிஸ்தானில் இரு தற்கொலைத் தாக்குதல்கள்-18 பேர் பலி
பாகிஸ்தான் இராணுவத்தின் பிரதான ஆயுத தொழிற்சாலைக்கு வெளியே இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 18 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையின் வெளிப்பகுதியில் தற்கொலைக் குண்டுதாரிகள் தங்களைத் தாங்களே வெடிக்க வைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகிலுள்ள ரைக்ஸ்லா வடநகரில் தொழிற்சாலையின் இரண்டு வாயில்களில் தாக்குதல்தாரிகள் ஒரே நேரத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக உள்ளூர் பொலிஸ் உயரதிகாரி நாஸிர் தரணி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் கடந்த திங்கட்கிழமை பதவி விலகியதையடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டாவது குண்டுத்தாக்குதல் இதுவாகும். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info