TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » உலகம் » மகிந்த அரசுக்கு...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

மகிந்த அரசுக்கு எதிராக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு செல்லவுள்ள ஆஸி. சட்டத்தரணிகள்!

[தமிழக நேரம் : February 3rd, 2010 at 07:39]

மகிந்த அரசுக்கு எதிராக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு செல்லவுள்ள ஆஸி. சட்டத்தரணிகள்!

அரசதலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரினால் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எதிராக அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிறிலங்கா சட்டத்தரணிகள் சிலர் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த முறைப்பாட்டின் பிரதியொன்று சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் இஸாசி ஒவேதாவிற்கும் அனுப்பப்படவுள்ளதாக அந்தச் சட்டத்தரணிகள் குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடின், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் தலையிடும் வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் ஆஸ்திரேலியாவிலுள்ள சிறிலங்கா சட்டத்தரணிகள் சார்பில் பேசவல்ல சட்டத்தரணியை மேற்கோள்காட்டி எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொன்சேகாவுக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரங்களில் கலந்துகொள்வதற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சென்ற சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் சிறிலங்கா குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: உலகம்
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 370
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 283
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 252
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 211
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 181
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து சுயவிருப்பத்தின் பேரிலேயே விலகினாராம்:  கருணா
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து சுயவிருப்பத்தின் பேரிலேயே விலகினாராம்: கருணா
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்