TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » உலகம் » இலங்கையில்...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை – அவுஸ்திரேலியப் பிரதமர்

[தமிழக நேரம் : July 1st, 2009 at 21:59]

இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை – அவுஸ்திரேலியப் பிரதமர்

இலங்கையில் நிலவி வரும் நிச்சயம் அற்ற நிலையும், தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையுமே, தமது நாட்டில் அவர்கள் தஞ்சம் கோருவதற்கான காரணம் என, அவுஸ்ரேலிய பிரதமர் கெவின் றுட் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற தன்மையால் தமது நாட்டில் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவுஸ்ரேலிய கடற்படை மற்றும் கிறிஸ்மஸ் தீவின் குடிவரவு திணைக்கள காரியாலயம் என்பன, இவ்வாறு அதிகரித்த புகலிடக் கோரிக்கையை கையாள தயாராக உள்ளதாகவும், தாம் 10,000 வரையான புகலிட விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போர் முற்றாக முடிவடைந்து விட்டதாகவும், தற்போது நாடு ஒற்றுமைப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா அரசு பரப்புரை மேற்கொண்டுவரும் நிலையில், மற்றொரு நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவிற்குச் செல்ல வேண்டாம் என, அமெரிக்க அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட பயண எச்சரிக்கை, சிறீலங்கா அரசை கோபமடையச் செய்தது போன்று அவுஸ்திரேலியாவின் இந்தக் கருத்துக்கும் கண்டனம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அவுஸ்திரேலிய கடற்பரப்பில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் என சந்தேகக்கப்படும் 194 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் கால் பதிக்க முன்னர் கைது செய்யப்பட்ட அனைவரும், வழமைபோன்று கிறிஸ்மஸ் தீவுக்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தஞ்சம் கோரும் மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடுமையான விசாரணைகள் இடம்பெறுவதாக, அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.

Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: உலகம்
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 370
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 283
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 252
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 211
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 181
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
ஐயோ அம்மா...! என்னை காப்பாத்துங்கோ...!!!‏ - ஒரு இனத்தின் அவலக்குரல்
ஐயோ அம்மா...! என்னை காப்பாத்துங்கோ...!!!‏ - ஒரு இனத்தின் அவலக்குரல்
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்