|
ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல்-ஜனாதிபதி புஷ்
ஜோர்ஜியா தொடர்பில், ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையிலான சொற்போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் பிராந்தியத்தில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி புஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். 21ஆம் நூற்றாண்டில் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் முறை இதுவல்லவென்று குறிப்பிட்ட ஜனாதிபதி புஷ், ரஷ்யா தனது ஆக்கிரமிப்புப் படையை மீளப் பெறவேண்டுமெனவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அந்தப் பிராந்தியத்தில் ரஷ்யாவால் மாத்திரமே அமைதியை உறுதிப்படுத்த முடியுமென ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார்;. ரஷ்ய மக்களும், படையினரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், ரஷ்யா இதே பாணியிலேயே மீண்டும் பதிலளிக்குமெனவும் அவர் கூறினார்.
மேற்குலகுடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுவதை ரஷ்யா தவிர்க்க விரும்புவதாகவும், பிரான்ஸினால், மத்தியஸ்தம் செய்யப்பட்ட அமைதித் திட்டத்தில், ஜோர்ஜியாவே இதுவரையில் கைச்சாத்திட மறுத்துள்ளதாகவும் டிமிக்கிரி மெட்வடேவ் குறிப்பிட்டுள்ளார்.
ஜோர்ஜியா விடயத்தில் ரஷ்யாவின் நடவடிக்கையானது அளவுக்கு அதிகமானதென்று விமர்சித்த, ஜெர்மனியின், தலைவி ஏஞ்சலா மைக்கெல்லுடன் பேச்சு மேற்கொண்ட பின்னரே ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |