TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » உலகம் » அதிபர் பதவியிலிருந்து முஷாரப் திடீர் ராஜினாமா-பாகிஸ்தானில் பரபரப்பு
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
அதிபர் பதவியிலிருந்து முஷாரப் திடீர் ராஜினாமா-பாகிஸ்தானில் பரபரப்பு

அதிபர் பதவியிலிருந்து முஷாரப் திடீர் ராஜினாமா-பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் அதிபர் பதவியை பர்வேஸ் முஷாரப் இன்று ராஜினாமா செய்தார். முன்னதாக தொலைக்காட்சியில் தோன்றி பேசிய அவர், நாட்டு நலனுக்காகவே அதிபர் பதவியில் இருந்து, தான் விலகுவதாகவும்,. தனக்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டன தீர்மானத்தைக் கண்டு, தான் பயப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அதிபராக இருக்கும் முஷாரப் பதவி விலக வேண்டும் அந்த நாட்டின் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சியும் வலியுறுத்தி வந்தன. அதிபர் முஷாரப் மீது பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சிகளிலும் பாகிஸ்தான் ஆளும்கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் தீவிரமாய் ஈடுபட்டு வந்தன. அதிபர் பதவியிலிருந்து புதன்கிழமைக்குள் அவர் விலக வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அதிபர் பதவியிலிருந்து தான், ராஜினாமா செய்வதாக முஷாரப் இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தொலைக்காட்சியில் தோன்றி அவர் உரையாற்றினார். அப்போது, தீவிரவாதிகளிடம் இருந்து பாகிஸ்தானை காப்பாற்றியதாகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும், தான், உழைத்ததாகவும் அவர் தெரிவித்தார். தற்போது, தேசத்தை ஆளும் தேசவிரோதிகள், தனக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், அதைக்கண்டு தான் பயப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முஷாரப் இன்று ராஜினாமா செய்ததை முன்னிட்டு  பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர்கள் சந்தோசத்தில் ஆடி மகிழ்கின்றார்கள்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் மகளிர் உரிமைக்காக, தான், பாடுபட்டதாகவும் முஷாரப் தெரிவித்தார். இந்நிலையில், அதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்தது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் அதிபர் பதவியில் பெண் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று பெனாசிர் கட்சி இணைத்தலைவர் சர்தாரி தெரிவித்துள்ளார்.
 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்