TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » உலகம் » விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கையால் வெல்ல முடியாது-எம்.கே.நாராயணன்
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கையால் வெல்ல முடியாது-எம்.கே.நாராயணன்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கையால் வெல்ல முடியாது-எம்.கே.நாராயணன்

தற்பொழுது இலங்கையில் முன்னெக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை, இலங்கை அரசாங்கம் இராணுவ ரீதியாக வெற்றிகொள்ள முடியாது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.  விடுதலைப் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தக்கூடிய திறனை இன்னமும் அவர்கள் கொண்டிருப்பதாக 'ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் நாராயணன் கூறியுள்ளார்.

"எமது வாதம் என்னவெனில், பல விடயங்களில் தமது தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய உரிமை உள்ளது என்ற உணர்வு தமிழர்களுக்கு ஏற்படாதவகையில் நாம் வெற்றிபெற முடியாது. விடுதலைப் புலிகள் பலமிழக்கச் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திறன் ஒழிக்கப்படவில்லை" என்றார் அவர்.

"கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது" எனச் சுட்டிக்காட்டிய நாராயணன், "சண்டையில் அவர்கள் வெற்றிபெற்றாலும், போரில் அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்பதில் எனக்கு உறுதியில்லை" என்றும் கூறியுள்ளார்.

"அரசாங்கம் தமிழ் சமூகத்தைத் தமது பக்கம் கொண்டுவரவில்லையென நான் நினைக்கின்றேன். இது இலங்கை அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியளிக்காத கருத்துத்தான், எனினும், இதுவே அவர்களுக்கு வழங்கக் கூடிய சிறந்த ஆலோசனை" என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

வடக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக மீட்பதற்கான யுத்தத்தை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையிலேயே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் பாதுகாப்புக் குறித்துக் கண்காணிப்பதற்கு இலங்கை வந்திருந்த இந்திய புலனாய்வுப் பிரிவினர், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தரப்பை எச்சரித்துச் சென்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கைப் படையினர் தமது தாக்குதல்களையும், தாக்குதல் திறன்களையும் குறைப்பதே சிறந்தது என இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அரசாங்கம் மோதல்கள் மூலம் வெற்றிபெறாது என சிரித்துக்கொண்டே கூறியிருந்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 

 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்