TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » உலகம் » முஷாரபின் பதவி விலகலை ஒபாமாவும், மெக்கெய்னும் வரவேற்பு!
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
முஷாரபின் பதவி விலகலை ஒபாமாவும், மெக்கெய்னும் வரவேற்பு!

முஷாரபின் பதவி விலகலை ஒபாமாவும், மெக்கெய்னும் வரவேற்பு!

பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப், தனது பதவியிலிருந்து விலகியதை, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான பராக் ஒபாமாவும், ஜோன் மெக்கெய்னும் வரவேற்றுள்ளனர். சரியான நேரத்தில், மிகச் சரியான முடிவை பர்வேஷ் முஷாரப் எடுத்துள்ளாரென ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாகிஸ்தானில் நிலவி வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளதெனவும் அவர் கூறினார்.

பர்வேஷ் முஷாரப் பதவி விலகியுள்ளதால் தற்போது நிலவும் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி தீவிரவாதம் மற்றும்  உணவுப் பற்றாக்குறை ஆகியனவற்றை ஒழிக்கவும், மக்களாட்சியை நிலைநாட்டவும் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், பர்வேஷ் முஷாரப் பதவி விலகியதன் மூலம் மக்களாட்சி வலுப்படுவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளதாக ஜோன் மெக்கெய்ன் தெரிவித்துள்ளார்.
 

 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்